பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் குகை 27 சீதா : நான் போய் அவரிடம் பேசிப் பார்க்கிறேன். திருப்தியாக இருந்தால் அப்புறம் இரண்டு பேரு மாகப் போவோம். மாதவன் : திருப்தியில்லையென்று நீ வரவா போகிருய்? உனக்கு எல்லாம் திருப்தியாகத்தான் இருக்கும். உன்னுடைய ஆசை நிறைவேற வேணுமே? சீதா : உங்கள் அக்காளுக்குச் சமாதானம் செய்ய வேண்டாமா ? அவர்களுக்கு ஏதாவது ஒரு தங்கச் சங்கிலி அல்லது காசுமாலை வாங்கி அனுப்புங்கள். மாதவன் : எ கற்காக அனுப்பவேனும் அதையும் ஒரு பாசாங்கென்று அவள் சொல்லுவாள். அவளுக் குப் பணத்திலும் காசிலும் இருக்கிற பிரியம் என் மேலே கால்பாகக் கூட கிடையாது. அவள் புருஷன் அதை விட......... சீதா : பிரியமில்லாமலா உங்களைப் பார்க்க வந்தாள் : மாதவன் : ஏதாவது சீதனம் வாங்கலாம் என்று வக் திருப்பாள்...... சீதா : உங்களுக்கு ஏன் அவள் பேரிலே இத்தனை வெறுப்பு? மாதவன் : உ ண் ைம யாக நான் சொல்கிறேன். அக்காளைக் கண்டால் எனக்குப் பிடிக்கிறதே இல்லை. ஏன் என்று எனக்கே தெரியவில்லை. ஆலுைம் அவளுக்கு இக் கனே நகை ஆசை கூடாது. சீதா : பிறந்த வீடென்ருல் பெண்களுக்கு ஆசை இருக் காதா? சரி, துங்கலாமா ? சொம்ப நேரமாகி விட்டது. கிம்மதியாகத் துங்குங்கள். (எழுந்து பக்கத்திலுள்ள தங்கள் படுக்கையறைக்குப் போ கிருர்கள்.) திரை