பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம் மூன்று - காட்சி ஒன்று (மாதவன் மாளிகை, ஓர் அறையிலே சிதா கவலையோடு அமர்ந்திருக்கிருள். மாதவன் வெளியே சென்றிருக்கிருன், மாலை சுமார் நான்கு மணி. சரோஜா உள்ளே நுழைகிருள், ! சரோஜா : சீதா, செளக்கியமா ? சீதா யார் சரோஜாவா ? வா வா. இத்தனை நாட்க ளாக என்னே மறந்துவிட்டாயா ? சரோஜா : இல்லை சீதா, உன் கல்யாணத்திற்குப் பிறகு நான் பட்டணத்திலேயே இல்லை. டெல்லிக்குப் போய் அண்ணு வீட்டில் இரண்டு மாகம் இருந்து விட்டுப் போன வாசக்தான் வந்தேன். சீதா : டெல்லியிலே அண்ணு வீட்டிலே எல்லோரும் செளக்கியமா ? சரோஜா எல்லோரும் செளக்கியத் தான். எனக்குக் கூட டெல்லி ரொம்பப் பிடித்தது......ஆமாம், சிகா - நீயேன் இப்படி வாடி இருக்கிருய் ? சீதா (மெதுவாகச் சிரித்து) ; இல்லையே, என்ருகக் கானே இருக்கிறேன்...' சரோஜா : மாதவனுக்கு இப்போ வேலே கூட இல்லை யாமே ; அவருக்கு உடம்பு எப்படி இருக்கிறது : சீதா (விசனத்தோடு) . அதுதான் சரோஜா எனக்கு ஒரே கவலையாக இருக்கிறது. காளாக காளாக கிலைமை மோசமாகத்தான் தெரிகிறது. எத்த னேயோ வைத்தியம் செய்து பார்த்தாயிற் று. சரோஜா : புதிதாக எதோ ம ன ம ரு த் து வ ரி டம் போ னிர்களாமே ? wo—4