உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

மனத்தின் தோற்றம்



கொண்டவர்களே அவர்கள். அதாவது இப்போது மக்கள் பேசும் புதிய வழக்காறுகள் பழைய இலக்கண விதிக்கு மாறுபட்டிருப்பினும், அதைப் பொருட்படுத்தாது, பழமையை நீக்கிப் புதிய வழக்காறுகட்குப் பொருத்தம் கற்பித்து அவற்றை மொழியில் புகுத்துகின்றனர்.

“பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே”

எனப் பவணந்தி முனிவர் நன்னு லில் கூறியுள்ளார். மற்றும், ஆர்தர் மன்னன் தன் இறுதிக் காலத்தில் தன் அமைச்சர் சர்-பெடீவரிடத்தில் “Old order changeth yielding place to new” என்று கூறினானாம். ‘கழிதல்’ என்பதை விட, changeth என்பது மிக்க பொருத்தம் உடையதாகத் தோன்றுகிறது.

புதுமையைப் புகுத்துபவர்கள் தங்கள் கொள்கைக்கு அரணாக இந்தக் கருத்தைக் கூறுகின்றனர். ஆனால், இங்கே, “பழைய காலைத் தூர்க்காதே - புதிய காலை விடாதே” என்னும் பழமொழி இருப்பதையும் நினைவுசெய்துகொள்ளல் வேண்டும். கால் என்றால், நீரோடும் வாய்க்கால்.

“முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொரு
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே.”

என்பது மாணிக்கவாசகரின் திருவாசகப் பகுதி.

பழமையைக் கழித்துப் புதியன புகுத்தும் பயனுள்ள நல்ல பணி இன்றைய மொழியியலாரால் இப்போது மட்டும் செய்யப்படவில்லை. இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டு களாகவே இந்தப் பணி முன்னோரால் செய்யப்பட்டு வந்துள்ளது.

தொல்காப்பியர் தொல்காப்பியத்தில் சொல்லியுள்ள இல செய்திகளைப் பவணந்தியார் நன்னுாலில் விட்டுவிட்டார்;