பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

மனத்தின் தோற்றம்



2. அளவுக்கு மீறிய மறம் (வீரம்) காட்டுதல் பேடித் தன்மையைப் போலவே நல்ல பயன் தராது.

3. மானத்தோடு பசித்திருக்கலாம், நாணம்-மானம் இன்றி மற்றொருவரிடம் வாங்கி உண்பது உண்மையான உணவாகாது.

4. உண்மையான விருப்பமின்றிக் கடமைக்கு ஈவது, ஈயாத கஞ்சத்தனத்தைப் போலவே பெறத் தகுதியற்றது. 5. செய்யக் கூடாத செயல்களை மேற்கொண்டு செய்வது, மடத்தனமாய்க் கருதப்பட்டு நல்ல பயனை நல்காது.

6. பொய்யான உள்ளத்துடன் நடித்துச் செய்யும் உதவி, கீழ்மையினும் கீழ்மையானது.

7. ஒருவருடன் நட்பு கொண்டு, அவருக்குத் துன்பம் வந்தபோது நழுவி விடுதல் கொடுமையினும் கொடுமை யாகும்.

8. அறிவில்லாத முடனுடைய துணை, தனிமையிலும் தாழ்ந்தது-பயனில்லாதது.

9. மிகவும் தளர்ந்து தாழ்ந்து இழிந்த நிலையில் உள்ள முதுமை, சினம் எந்த நற்பயனையும் அடையச் செய்யாதது போல் தக்க பயனை எய்தச் செய்யாது.

10. ஒருவர் தம் செல்வத்தைத் தாம் மட்டும் துய்த்து மகிழ்தல், ஒன்று மற்ற ஏழைமையைப்போல் துய்க்காத தாகவே கருதப்படும்.

5. அல்லாதது - (ஆகாதது) கூறும் பத்து மொழிகள்

1. கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுக்குள், நல்ல கணவனது இயல்பு அறிந்து ஒழுகாதவள் நல்ல மனைவி யாகாள்.