பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிலி ஒரு நாள் இரவு எட்டு மணியிருக்கும். புதிதாக வந்த நண்பரொருவரோடு வெளித் திண்ணையிலமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தேன். சந்தித்துப் பல ஆண்டுகளாகிவிட்டபடியால் அவர் குதுாகலத்தோடு தமது வாழ்க்கையைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந் தார். அவர் முகத்திலே மகிழ்ச்சி பொங்கிக்கொண் டிருந்தது. அது கார் காலம். வானத்திற்குப் போர்வையிட் டது போல எங்கும் கருமேகக் கூட்டம். திடீரென்று இடியின் பெருமுழக்கம் கேட்டது. மின்னல் பளிச் சிட்டது. அது வரைக்கும் சிரித்துப் பேசிக்கொண் டிருந்த நண்பர் இடிக் குரலைக் கேட்டு அலறி நடுங்க லானர். இடியோசை கேட்கும் ஒவ்வொரு தடவை யும் அவர் துள்ளியெழுந்தார். மருண்டு மருண்டு அச்சத்தோடு சுற்றுமுற்றும் பார்த்தார். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இடியிடிப்பதைக் கண்டு அவர் இப்படி அஞ்சுவானேன்; கார்காலத்திலே இடியும் மின்னலும் இயல்புதானே என்று நான் உள்ளுக்குள் ளேயே எண்ணிக் கொண்டிருந்தேன். 'வீட்டிற்குள்ளே போய்விடலாமா?' என்று அந்த நண்பர் விரைவாகக் கேட்டுக்கொண்டே எழுந்து நடந்தார். வீட்டிற்குள்ளே சென்று அமர்ந்த பிறகும் அவ ருடைய பேரச்சம் தணியவில்லை. இடிக்குரல் கேட்கும் போதெல்லாம் அவர் திடுக்கிட்டெழுந்தார்.