பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 மனமும் அதன் விளக்கமும் நனவிலி மனத்தை நல்ல வழிகளிலே செல்லும்படி செய்து அதையும் பயன்படுத்த முடியுமானல் மிகுதி t1 M fT Gðf நன்மை கிடைக்கும். நனவு மனம் எதையும் சீர்தூக்கிப் பார்க்கும் தன்மை வாய்ந்தது. ஆனால் நனவிலி மனம் நாம் விழித்திருக்கும்போது வேலை செய்யாமல் இருப்ப தோடு, அதற்குச் சீர்தூக்கிப் பார்க்கும் தன்மையும் இல்லை. அதன் ஆதிக்கம் ஓங்காதபடி நனவு மனமே தடுத்து வைத்திருக்கிறதென்பதை நாம் முன்பே தெரிந்துகொண்டிருக்கிருேம். அதனல் ஏதாவது ஒரு கருத்தை ஒருவருக்குக் கூறினல் அவருடைய நனவு மனம் காவற்காரன்போலத் தடையாக நிற்பதனல் அந்தக் கருத்து நனவிலி மனத்திற்கு எளிதில் செல்ல இயலாது. ஆனல் மனவசிய நிலையில் இருக்கும் பொழுது இந்த நிலைமை முற்றிலும் மாறிவிடுகிறது. மனவசிய உறக்கநிலையில் நனவு மனத்தின் ஆதிக்கம் குறைந்துவிடுகிறது. நனவிலி மனம் ஓங்கியெழுந்து மனவசியக்காரரோடு ஒத்துழைக்கத் தொடங்கிவிடு கிறது. ஆதலால் அந்த நிலையில் மனவசியம் செய்பவர் கூறுகின்ற கட்டளைகள் நனவிலி மனத்தை நேராக அடைய முடிகிறது. அதனல் மனவசியம் செய்யப் பட்டவர் மனவசியம் செய்வோருக்குப் பணிந்து அவர் 。 ・ヘ・ *۔ --سم ه சொல்கின்றபடி செய்கின்ருர். மனவசிய உறக்கம் என்பதை நாம் உறக்க நிலையில் இருப்பதைப்போன்ற உறக்கமென்று எண்ணி விடக்கூடாது. அது உறக்கமுமில்லை; நினைவிழந்த தன்மையுமன்று. அது பொதுவாக உறக்கம் ஏற்படு வதற்குச் சற்று முன்னல் ஏற்படும் ஒரு நிலைமையைப் போன்றதேயாகும். மனவசிய உறக்க நிலையில் மன வசியம் செய்பவர் ஆணையிட்டால் நடக்கலாம்;