பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திறப்புரை

107


பவர்-மறந்தும் மற்றவர்களுக்கு மனத்தாலும் தீங்கிழைக்கலாகாது என்ற பெருநெறியை முதலில் உணர்தல் வேண்டும்; உணர்ந்து, அதன் வழி ஒழுகவும் வேண்டும். அன்றுதான் வள்ளுவர் உண்மையில் வாழ்பவராவர். வள்ளுவர் காலம் தொடங்கி இன்று வரையில் அவர் தம் நூல் பற்றி எழுந்த உரைகள் பல. அவர்தம் மொழியைப் பொன்னைபோலப் போற்றும் நெறியில் எடுத்தாண்ட நூல்கள் பல. சங்க காலங் தொடங்கி இன்றுவரை எழுந்த எழுத்தோவியங்களில் எல்லாம். வள்ளுவர் கருத்தின் வாடை வீசுவதைக் காணலாம்.

நாடெங்கும் வள்ளுவரைப் பற்றிப் பேசுகின்றோம்; அவர்தம் புகழ் பாடுகின்றோம் குறள்களை மனப்பாடம் செய்கின்றோம்: ஆனால், அதற்கடுத்த உள்ளத்திறப்பை மட்டும் மறந்துவிடுகிறோம். அன்றாடப் பணிகளை முடித்துப் பட்டு மெத்தையிலோ, பாயிலோ அன்றிப் பருக்கைக் கறற்ரையலோ படுக்கும் ஒவ்வொருவனும் ஒவ்வொருத்தியும், ஒவ்வொரு தமிழனும்-ஏன் ஒவ்வொரு மனிதனும், அன்றாடம் தான் செய்த செயல்களை எண்ணி, அவை எவ்வளவுக் கெவ்வளவு வள்ளுவர் காட்டிய வழிக்கு அப்பால் சென்றுவிட்டன என்று நோக்கினால், அவனுடைய அந்த எண்ணத்தில் உள்ள தவறுகள் தெரியாமல் போகா. தெரிந்த அன்றை நிலையை மறுநாள் ஒப்பிட்டுப் பார்ப்பின் ஓரளவு திருத்தமும் காணப்பெறலாம். அப்படியே நாள்தோறும் எண்ணி எண்ணி ஆராயின், திண்ணியராகிச் செம்மை நெறியில் செல்ல இயலும். ஆனால், நாம் எண்ணுகிறோமா? நெஞ்சில் கை வைத்து நினைத்துப் பாருங்கள்! ஆயிரத்துக்கொருவர்-இல்லை. கோடிக்கொருவர்தான் எண்ணுகிறோமா? எண்ணினால், இவ்வாறு நாட்டில் பசியும் பிணியும் பகையும் வளருமா? எண்ண வேண்டும். அவை நீங்க வேண்டுமென்ற அவ்வெண்ணத்திற்கு உள்ளம் திறக்க