பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தசாவதாரம்

21


அடுத்து வருகின்ற நரசிம்ம அவதாரமே மனிதத் தோற்றத்தின் விடிவெள்ளி. அதற்கு முன்பு இராப்பகல் இன்றி, வீடு வாயில் இன்றி, ஆயுதங்கள் இன்றி, வேறு யாதொரு வேறுபாடும் இன்றி விலங்கினங்கள் வாழ்ந்த நிலையிலிருந்து பின் நெடுங்காலம் சென்று அனைத்துக் கட்டுக்காவல்களையும் அமைத்துக்கொண்ட மனித இனம் உருவான காலம் ஒன்றிருந்தது. விலங்கின உயிர் வாழ்வு, மனிதனது உயிர் வாழ்வு பெற இடையில் கழிந்த ஆண்டுகள் கணக்கில. அந்த இடைப்பட்ட காலத்து விளங்குணர்வும் மனித உணர்வும் - ஏன் ? - விலங்குடலும் மனித உடலும் - கலந்த ஓர் உயிர்த் தோற்றம் இன்றி நேரில் மனித உயிர்த்தோற்றம் அமைந்திராது என்பது உண்மை. அந்த விலங்கும் மனிதனும் கலந்த ஒன்றை விளக்குவதே நரசிங்க அவதாரம். எந்த வேறுபாடு மில்லாத விலங்கினத்திலிருந்து, வேறுபாடு காணும் பகுத்தறிவு நிலைக்கு மனிதன் வந்த வகையை விளக்குவதே நரசிங்க அவதாரத்தில் இரணியன் கேட்டதாகக் கூறும் வரம். எனவே, விலங்கின உயிர் மனித உயிரினமாக மாறிய கதையே அது.

மனிதன் தன் நிலை பெற்ற அந்தத் தொடக்கக் காலத்திலேயே அனைத்திலும் உயர்ந்து சீரிய ஒழுக்கம் பெற்ற வனாகிவிடவில்லை. அதற்குள் கழிந்த கற்பங்கள் பல. அந்த இடைக்கால நிலையை விளக்குவனவே அடுத்து வரும் வாமனுவதாரமும் பரசுராம அவதாரமும். அறிவும், அங்க அமைப்பும் ஒன்றற்கொன்று ஏற்றத் தாழ்வு பெற்றே அவன் ஆதி காலத்தே இருந்தான் என்பதை வாமனுவதாரத்தின் முன் பகுதியாகிய சிற்றுருவமும் பின் பகுதியாகிய பேருருவமும் உணர்த்துகின்றன, அவன் பின்னால் பெறப்போகின்ற அளக்கலாகா அறிவின் ஆற்றலைக்கொண்டு விண்ணையும் மண்ணையும் அளந்தறிந்து மேல் எங்கு அறிவைச் செலுத்துவது என்று எண்ண