பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

மனிதன் எங்கே செல்கிறான் ?


மிடுவான் என்பதையன்றே மூவடிக்கதை உணர்த்துகின்றது? மிருகமும் மனிதனும் கலந்த நரசிங்கத்தன்மை மாறி முதலில் மனித உடல் பெற்றவன், தன் அறிவால் பின்னர் அத்தனையையும் அளக்கும் ஆற்றலும் இயல்பும் பெறுவான் என்பதைக் காட்டுகின்றது அந்த அவதாரம். பின்னர்ப் பெரிய ஆற்றலைப் பெற்று நின்றாலும், அவன் உள்ளத்தே மிருக உணர்ச்சிகளாகிய பழி வாங்குதல், தன் முனைப்பு, யாரும் சமமில்லை என்ற தருக்கு எல்லாம் நிரம்பியிருப்பின், அவன் எத்துணைவலிமை பெறினும் பயனில்லை என்பதை விளக்க வருவதே அடுத்த பரசுராம அவதாரம், பரகபாணியாகித் தாயையே கொன்று, துன்பிழைத்த ஒருவனுக்காக, அவன் பரம்பரையையே கருவறுக்க வேண்டுமென்ற மிருக உணர்வு தலை காட்ட, நிலை கொள்ளாப் பெருவெள்ளம் போலச் சுற்றித்திரிந்தவனல்லவா பரசுராமன்? அவனிடம் பூரண மனிதப் பண்பு பெறாத நிலையைத்தான் நாம் காண்கின்றோம். ஆம்! நற்பண்பும், பிறர் துயரைத் தனதாகக்கருதும் நிறைமனமுமுடைய மனிதப் பண்பாளன் யாவனுயினும், அத்தகைய மிருக உணர்வோடு பலமும் பிறவும் பெற்ற ஒருவனே-அவன் எவ்வளவு வலிமை பெற்றவயிைனும் அடக்க இயலும் என்பதையே இராமன் பரசுராமன அடக்கிய வரலாறு நமக்கு உணர்த்துகின்றது. ஆம்! அனைத்து நலன்களும் நிரம்பி, மனிதன் மனிதனுக்காகவே வாழ்ந்த ஒரு நிலையைக் காட்டுவதே இராமாவதாரம். மனிதன் மிருக உணர்வுக்கு மாறுபட்டு, தான் இன்புறுவது உலகின்புறக்கண்டு. அதற்கு மேலாக, மற்றவர் நலம் பெற்று வாழ்வதற்காகத் தன் உரிமைகளையும் இன்பங்களையும் விட்டுக்கொடுத்து, வையகம் துயர் நீங்க வாழ்வானுயின், அவனே வெல்வார் யார்? உலகையே உலுக்கிய பரசுராமனது மிருக வீரம், இராமன் முன் மண்டியிட்டு மறைந்தது! இராவணன் முதலியோரது