பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தசாவதாரம்

23


கொடுமை அழிந்தது! ஆம்! அந்த நினைவிலே நிறைந்த நல்உள்ளத்துடன் வாழ்ந்த மனிதன் முன் அனைத்தும் தாழ்ந்து அடங்கும். மனிதனது நிறைந்த கலங்களின் உச்சியில் நிற்கும் ஒரு நிலையினை உணர்த்துவது இராமவதாரம் அவன் மற்றவரால் குற்றம் காண இயலாத வகையில் வாழ்ந்த மனிதனது பிரதி பிம்பம். ஆனால், வாலியை மறைந்து கொன்றான் என்ற குற்றம் இராமன் மேல் உண்டு. கடவுளாகப் போற்றப்படினும் மனிதனாகப் பிறந்து நலங்கேடுகளை அனுபவித்த அவனுக்கு இக்குற்றம் கற்பிக்கப்படுதல் வியப்பன்று. இன்ப துன்பத்தின் இடையில் உழல்பவன் முற்றிய மனிதன். தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் மனிதன். நாடெங்கும் வாழ நலம் நல்குபவன் மனிதன். அவன் தன் கடமை வழிச் செயலாற்றும் போது வழுக்கிடங்கள் இல்லாமல் இல்லை. கடமை உணர்ச்சி தவறாத நிலையே அவன் உயர்நிலை. இராமன் வாலியின் வலியறிவான். அவன் முயன்றால் அன்றைப் பொழுதிலே தன் மனேவியையும் பெற முடியும் எனவும் உணர்வான். தன் வாட்டம் உடனே அகலும் என அவன் உள்ளம் உணர்த்தியிருக்கும். ஆயினும், சுக்கிரீவனுக்குக் கொடுத்த வாக்கிற்குக் கட்டுப்பட்ட கடமை உணர்வே, அன்றே மனைவியைப் பெறும் தன்னலத்தை மறந்து, தனக்கு நேரும் பழியையும் பாராது, மனித உணர்வோடு அவனேக் கடமையில் இறக்கியது. அக்கடமை பற்றியே, அன்னேயும் தந்தையும் இட்ட ஆணைக்குட்பட்டுத் தனக்காக்கிய நாடு துறந்து காடு நடந்தான். ஆம்! தான் வாடினும் மற்றவர் வாழ வேண்டுமென்பது அவன் கருத்து, அக்கருத்து, நிறை மனிதனது சின்னம். எனவே, தசாவதாரத்தில் மனிதனது நிறைவுற்ற உச்ச நிலையை விளக்குவது இராமாவதாரம்.