பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தசாவதாரம்

25


கூறிய கண்ணனுக்கும் வேறுபாடு இல்லையென்று யார் சொல்லக் கூடும்? ஆம்; அதில் கண்ணன் தவறென்றுமில்லை, அந்த அவதாரம் மனிதன் மிருகமாக மாறும் நிலையின் முதற்படியாகும். உருவத்தாலும் உள்ளத்தாலும் மிருகமாய் இருந்த உயிர், உருவம், உள்ளம் இரண்டினும் உயர்ந்த ஒழுக்கச் சீலந்தாங்கிய மனிதனாயிற்று. மனிதன் பின் மனித உருவத்தோடு மிருக உள்ளம் வாய்க்கப் பெற்றுள்ளான். இன்றைய மனிதன் உள்ளத்தால் மிருகமானன் என்பதில் இழுக்கென்ன? ஆங்கில அறிஞன் ஒருவன் மனிதனைக் குறிக்கும் காலத்து, மனிதன் பறவை எனப் பறக்கவும், விளங்கென ஊரவும், மீனென நீந்தவும் பயின்றான்; மனிதனாக மட்டும் வாழக் கற்றுக்கொள்ளவில்லை, என்று கூறியது உண்மை யன்றோ! ஆம்! எப்படியாவது மற்றவர்களை ஏமாற்றி வஞ்சித்துக் கொன்று தான் மட்டும் வாழ வேண்டுமென்று கருதுவது மிருக உணர்ச்சியன்றி வேறென்ன? ‘எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறென் றறியேன் பராபரமே!’ என்ற மனித உள்ளமும், மறந்தும் பிறன்கேடு சூழ்க!" என்ற மனிதப் பண்பாடும், பகைவனுகருளும் பண்பட்ட உணர்வும் இன்று மாறி மறைந்து வருகின்றன வல்லவா? அதைப்போன்றே தனிப்பட்ட நல்லொழுக்கங்களிலும் மனிதன் தவறிவிட்டான். இவைகளையெல்லாம் கண்ணன் அவதாரம் நமக்குக் காட்டுகிறது. இதனாலேதான் போலும் கண்ணணை வழிபடுகின்ற அடியவர்களெல்லாருங்கூட, அவனது முதுமை நிலையில் கருத்து வையாது, கள்ளங் கொள்ளாப் பிள்ளை உருவில் அன்பு கொண்டு போற்றுகின்றார்கள்! குழந்தைக்கண்ணன் மக்கள் மனத்தில் குடிகொண்ட அளவுக்கு முதுமைக் கண்ணன் இடம் பெறவில்லை என்பதை அறியாதார் யார்!

2