பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது கலாசாரம்?

33


துன்பத்தில் புன்சிரிப்பு-துயரத்தின் நடுவில் உள்ள மகிழ்ச்சி. ஏன்?-துன்பத்தால் உள்ளத் தூய்மை வெளிப்படுமாதலால். ஆகவே, உயர்ந்த மனிதப் பண்பாட்டில் எவ்வித வேற்றுமையும் இடம் பெறாது. அனைத்தும் ஆன்றன என்ற உணர்வில் அது சிறக்கும். அத்தகைய அருநிலை எங்கு உளதோ, அங்குக் கலாசாரம் அரும்பிப் பூத்துக் காய்த்துக் குலுங்கிக் கனியாகிக் காட்சி அளிக்கும்.

அத்தகைய கலாசாரத்தில் மனிதன் மற்றவனே ஆராய்வதை விடுத்துத் தன்னைத்தானே ஆராயத் தொடங்குவான். எவ்வளவு உயர்ந்தவனாயினும், அன்றித் தாழ்ந்தவயிைனும், தன்னை உள்ளூற உணர்ந்தவனே பண்பாடு பெற்றவன். ‘தன்னை அறிந்தவன் தலைவனை அறிவான்,’ என்பது ஒரு சமயப் பழமொழி. எனவே, தன்னை அறிதல் எல்லாத் தீமைகளின் நீக்கத்துக்கும் முதலிடமாகின்றது. அதுவே கலாசாரம்! கலாசாரம் என்பது நல்லொழுக்கத்தின் அடிப்படை என்றார்கள். அக்கலாசாரம் தன்னை மட்டுமன்றித் தரணியையும் வாழ வைப்பதாகும். ஒருவனை மட்டுமின்றி உலகையும் வாழ வைப்பதாகும்; ‘மறந்தும் பிறன்கேடு சூழற்க’, என்ற வள்ளுவர் வாக்கு அக்கலாசாரக் கட்டடத்தின் அடிப்படை. தான் கெடினும் தக்காருக்குக் கேடெண்ணா வாழ்வு கலாசாரவாழ்வு; தான் என்ற தருக்கன்று, யாவரினும் தான் மேலானவன் என்ற எண்ணமின்றி, அனைவருக்கும் தான் தொண்டு செய்தலே கடன் என்று கருதி பணியாற்றுபவனே உண்மையில் கலாசாரப் பண்பாட்டாளனவன். தான் மற்றவரைப் பழிக்காதோ மற்றவர்களுக்குக் கொடுமை செய்யாதோ, மற்றவரைக் கெடுக்காதோ வாழ்கின்றவன் கொண்ட வாழ்வு ஓரளவு பண்பாடு கலந்த கலாசார வாழ்வு என்றாலுங்கூட, தமிழ்