பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

மனிதன் எங்கே செல்கிறான் ?


நாடு அதனினும் மேம்பட்ட கலாசார வாழ்வை விளக்குகின்றது, தான் மற்றவரைப் பழித்துரைப்பதிலும் தன்னை மற்றவர் பழிக்காத வகையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தான் மற்றவரைக் குறை கூருதிருப்பதைக் காட்டிலும் தன்னை மற்றவர் குறை கூறாதிருக்கும் வகையில் தான் நடந்துகொள்ள வேண்டும். இப்பண்பாட்டைத் தமிழ் நாட்டுக்கே தலைசிறந்த ஒன்றாக விளங்கும் கற்பின்மேல் ஏற்றிப் பேசுகின்றார் ஒரு புலவர்.

கற்பென்பது, ஒரு பெண் கொண்டவனைத் தவிர மற்றொருவனையும் விரும்பாத நிலையில் அமைவது என்று தான் கூறுவார்கள். ஆனால், சாத்தனாரோ, ‘கற்புடைப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகார்,’ என்கின்றார். அக்கற்பென்பது தன் மனத்தளவினன்றிச் செயலளவிலும் அமைய வேண்டுவதென்பது அவர் கருத்து. மற்றவர் தன்னைக் கண்டு மனத்தாலும் காமுறாத வகையில் நடந்துகொள்வதே கற்பாகும் என்று காட்டுகின்றார் அவர். ஆம்! இக் கற்பு நெறி பற்றிக் கூறியது பிற பண்பாடுகளுக்கும் பொருந்தும்.

எனவே, கலாசாரம் என்பது, தன் சொல்லளவிலன்றிச் செயலளவில் முகிழ்ப்பதாகும். ஒருவரும் தன் மேல் குறை கூறாதபடி தன் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். எல்லாம் செய்யவல்ல காரணத்தால் உலகில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை எனத் தருக்கி வாழ்தலும், ஒன்றுமில்லை என்று சோம்பி வாடுதலும் நீக்க வேண்டுவனவாம். அது போன்றே, சுற்றுச் சார்புகளாலும் பிற வசதிகளாலும் சிறு செயல்களைச் செய்தவரைப் பெரிதாக மதித்துப் பேசுதலும், வசதியற்று ஒன்றும் செய்யமாட்டாதவரை இகழ்தலும் கலாசார மாகா என்பதைப் பூங்குன்றனர் இறுதியாகக் கூறுகின்றார். அதன் அடிப்படையை ஆராய்ந்தால், ஓர்