பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெய்யறிவு



 

‘அறிவென்பது யாது? அது யாரிடத்து அமைந்துள்ளது? அதனால் உண்டாகும் பயன் யாது ? அது பெற்றார் எவ்வாறு வாழ்வர் ?’ என்பன போன்ற சில கேள்விகளுக்கு விடை காணல் ஒருவாறு மெய்யறிவை விளக்குவதாகும்.

அறிவென்றால், தேர்வில் 100க்கு 100 மார்க்கு வாங்குவது என்று தான் பலர் நினைக்கின்றனர். பள்ளியிலோ கல்லூரியிலோ படித்து ஒவ்வொரு தேர்விலும் நிறைய ‘மார்க்கு’ வாங்குகின்றவனை அறிவுள்ள பையன் என்று பெரியவர்கள் கூறக் கேட்டிருக்கின்றோம். அதிக மார்க்கு வாங்குபவர்களை அறிவுடையவர் எனப் பாராட்டி அரசாங்கமும் பிறவும் பதக்கம் முதலியனவும் வழங்குகின்றன. நூலை அப்படியே பயின்றோ, நெட்டுருப் போட்டோ, தேர்வில் அதிக எண் வாங்குவதைத்தான் அறிவு என்று எண்ணும் நிலை இன்று நாட்டில் இருந்தாலும், தமிழர் அது ஒன்றுதான் அறிவு என்று கொள்ளவில்லை.