பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

முன் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். எது எப்படியாயினும், உயிர் இனம் தோன்றிப் பல கோடி கற்பங்கள் கழிந்திருக்க வேண்டும் என்பது மட்டும் உறுதி. ஆகவே, இப்பரந்த அண்ட முகட்டின் எல்லையை எண்ணின், நம் மண் ஒரு திவலை. இதன் ஆயுட் காலத் தைக் கணக்கிடின், நம் வாழ் நாள் ஒரு நொடி. இதுவே இன்றைய மனிதன் வாழ்வு

வாழ்கின்ற மனிதன் இதை எண்ணிப் பார்ப்பதில்லை. எண்ணிப் பார்த்து ‘எல்லாம் பொய்’ என்று சொல்லும் துறவை மேற்கொள்ளவேண்டும் என்று நான் கூறவில்லை ; அது தேவையற்றதுங்கூட. ஆனால், இதை எண்ணின், மனிதன் மனிதனாக வாழ்வான் என்பது என் உள்ளக் கிடக்கை.

மனிதன் தன் நிலை கெட்டு விலங்காகி மாறும் நிலையினை. இந்நூலின் ஒவ்வொரு கட்டுரையிலும் காட்டிச் சென்றிருக்கின்றேன். மனிதப்பண்பு எத்தகையது என்பதை உலகப் பெரியார்களெல்லாம் வாழ்ந்து காட்டியிறுக்கின்றார்கள் ; வரைந்து வைத்திருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் மேலாகத் தமிழர் தம் பண்பாட்டை விளக்கும் அறநூல்கள் பல தமிழ் நாட்டில் உள்ளன. வாழ்வு நெறிக்கு வரம்பான நூல் என்று உலகத்துக்கு உணர்த்தும் திருக்குறள் தோன்றிய தமிழ் நாட்டிலேதான் நாம் வாழ்கின்றோம்; ஆனால், அந்நூல் வழி நடக்கக் கற்றோமில்லை.

இதில் வரும் கட்டுரைகள் பல ஆண்டுகளில் பலப். பல இதழ்களில் வெளியானவை, மனிதன் நிலை பற்றிய இக் கட்டுரைகளைத் தொகுத்தே இப் பெயரில் இந்நூல் வெளிவருகிறது. அக்கட்டுரைகளில் முதல் கட்டுரையாகிய ‘மனிதன் எங்கே செல்கிறான்?’ என்பதன் பெயராலேயே இந்நூல் அமைந்துள்ளது. வெறும் முதலால்