பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

மனிதன் எங்கே செல்கிறான்?


தான் கிடக்கும். ஒருவன் கட்டக் கந்தைக்கும் கையேந்தி நிற்க, மற்றவன் பட்டுடுத்துப் பொன் பூண்டு காரில் நாயுடன் பவனி வரும் பாழ் வாழ்வு இருக்கும் வரையில் உள்ளம் மூடப்பட்டதுதான். ஒருவன் வாடி வருந்தி உழைக்க மற்றவன் அவ்வுழைப்பின் பலனை உறிஞ்சி உல்லாச வாழ்வு வாழும் வரையில் உள்ளம் மூடப்பட்டது தான். ‘உள்ளம் திறக்கும் நாள் உளதோ!’ என்று ஏழை மக்கள் ஏங்குகின்றார்கள், ‘ஏனிந்த வேறுபாடு?’ என்று கூக்குரலிட முயல்கின்றார்கள். அவர்தம் வாட்டத்தை சில அரசியல் கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்நிலையில் நல்லவர்கள் கூடி நின்று வன்கண்மையை இல்லையாகச் செய்யலாம். ஏழை மக்கள், ‘உழைக்கும் உடமை நமதாகச் செய்வோம்!’ என வீறு கொள்கின்றனர். ஆனால், பணம் அவ்வெண்ணத்தை முறியடிக்கிறது; பட்டமும் சட்டமும் அவர்களைப் பராரியாக்குகின்றன. கோயில் திறப்பினைச் செய்த அரசியலார், அவர் தம் வாழ்வமைப்புக்கு வழி திறக்கவும் சட்டம் செய்ய வேண்டும். இந்திய ஆட்சி மன்றத்தே அது போன்ற சட்டம் வருமெனக் காண்கின்றோம். உண்மையில் நல்லவர் உள்ளம் திறக்குமானால், ஏழைகளை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால், ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடும்’ வீர வாழ்க்கையில் அவர்கள் வாழ விரும்பினார்களானால், செயலால் செய்ய வழி உண்டு. சிந்தை திறக்க நெறிகாட்டும் இத்துறையில் சிலர் உழைக்க முன் வந்துள்ளனர். வினோபாரின்பாவே தொடங்கிய பூதானமும், இந திய அரசாங்கத்தார் எஸ்டேட்டு வரியும், சென்னையின் தஞ்சைப் பண்ணையாள் சட்டமும் இச் சிறந்த மாளிகைகளின் முதற்படிகள்.

ஊர்தோறும் ஒருவருக்கும் ஒதுக்கிடம் வேண்டா; அனைவரும் எல்லாத் தெருவிலும் கலந்து வாழட்டும். அற-