பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுவா முன்னேற்றம்?



 

விசுவாமித்திரரின் சூட்சிகளுக்கு இலக்கானான் அரிச்சந்திரன். உயர்ந்த சூரிய குலத்து ஒப்பற்ற மன்னனாய்த் தோன்றி மாநிலம் காவல் செய்த அரிச்சந்திரன், கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக அனைத்தையும் இழந்தான். உள்ள பொருளையெல்லாம் கொடுத்தும் மேலும் பொருள் தர வேண்டியிருந்தமையால், விசுவாமித்திரருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற மனைவியையும் மகனையும் அடகு வைத்தான் அரிச்சந்திரன். அடகு வைத்தல் என்பது ஒரு பொருளைப் பணத்துக்கு ஈடாக வைத்துப் பணம் பெற்றுக்கொண்டு, பின் பணம் கிடைத்த பொழுது அப்பணத்தைக் கொடுத்து வைத்த பொருளை மீட்டுக்கொள்வது. நகை முதலிய பொருள்களையும், வீடு தோட்டம் நிலம் முதலியவற்றையும் அடகு வைத்துப் பொருள் பெற்றுக்கொண்டு வாணிபம் புரியும் மக்களைக் காண்கின்றோம். அதற்கென அரசாங்கத்தார் பல வரையறைகளையும் ஏற்படுத்தியுள்ளனர். ஆம்.