பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 99

‘'தேவலையே, இனி நீங்கள் உரை எழுதிப் பொருள் ஈட்டுவதற்குப் பதிலாக உரை எழுதாமலே பொருள் ஈட்டி விடலாம் போலிருக்கிறதே?”

‘உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான்! அவன் கொடுக்கும் பதினைந்தாயிரம் ரூபாய் பரிசுக்காக ஆண்டு தோறும் முப்பதினாயிரம் ரூபாய் ஆதாயம் கிடைக்கும் அருமையான தொழிலை நாம் விட்டுவிட முடியுமா, என்ன? - அதிலும், அந்தப் பதினைந்தாயிரம் ரூபாயைக் கூட அவன் ஒரே ஒருவருக்குக் கொடுக்கப் போவ தில்லையாம்; எல்லா உரையாசிரியர்களுக்கும் பகிர்ந் தளிக்கப் போகிறானாம் . அப்படித்தான் கொடுக்கிறானே, அதை எந்தவிதமான நிபந்தனையும் இன்றியாவதுக் கொடுக்கிறானா என்றால் அதுவும் இல்லை; அவன் கொடுக்கும் தொகையைக் கொண்டு ஆளுக்கொருக் கைத்தறி வாங்கி வைத்துக் கொள்ள வேண்டுமாம், அவனைப் போலவே இழை நீக்கி’ப் பிழைக்க - இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா, இந்தக் காலத்தில்?”

‘நடக்காது, நடக்காது! அறிவைக் கூடக் காசுக்குத் தக்கபடி அளந்து கொடுக்கும் காலமாச்சே, இது? ‘ என்றேன், நான்.

“ஒன்று வேண்டுமானால் செய்யலாம்-உடலுழைப்பைப் பற்றியும், அதன் உயர்வைப் பற்றியும் ஒரிரு புத்தகங்கள் வேண்டுமானால் எழுதலாம்; ஐந்து ரூபாயோ, ஆறு ரூபாயோ விலையும் வைக்கலாம்; ஆண்டொன்றுக்கு ஆறாயிரம் படிகளாவது விற்பனையாகும்!” என்றார் அவர்.

‘ இதை நீங்கள் வள்ளுவரிடம் சொல்லவில்லையா?”

‘சொன்னேன்; அவன்தான் இலக்கியத்தைச் சந்தைக்குக் கொண்டு வராதே!’ என்று ஒரே அடியாக அடிக்கிறானே?"