பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை

1. ஆளைக் கண்டு மயங்காதே!

உலகத்தை அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்த இருள். அதைப் பிரிய மனமில்லாமல் பிரிந்து கொண்டிருந்தது.

‘அம்மா, பால்’ என்று குரல் கொடுத்தான் பால்காரன்.

தன்னை அணைத்தபடித் தூங்கிக் கொண்டிருந்த தன் கணவன் ராமமூர்த்தியின் கையைத் தூக்கித் தலையணையின் மேல் வைத்துவிட்டுக் கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்தாள் கல்யாணி.

பாலை வாங்கிக் கொண்டு திரும்பியபோது, குவா, குவா!’ என்ற குழந்தையின் அழுகுரல் அவள் காதில் விழுந்தது.

திரும்பிப் பார்த்தாள். ‘என்ன அம்மா, இது கல்யாணமாகி நேற்றுத்தான் புருஷன் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள்; அதற்குள்....’

பால்காரன் முடிக்கவில்லை; ‘நல்ல வேடிக்கைதான்! யார் வீட்டுக் குழந்தையோ, என்னமோ ‘ என்று சிரித்தபடி உள்ளே வந்தாள் கல்யாணி.

அழகான ஆண் குழந்தையொன்று அவள் வீட்டுக் கூடத்தில் கிடத்தப்பட்டிருந்தது!