பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 விந்தன்

‘யாருடைய குழந்தை, இது? இங்கே எப்படி வந்தது?”

ஒன்றும் புரியவில்லை அவளுக்கு; சுற்றுமுற்றும் பார்த்தாள்.

புழக்கடைக் கதவைத் திறந்துகொண்டு யாரோ ஒருதாய் அவசர அவசரமாக வெளியே போய்க் கொண்டிருப்பது தெரிந்தது.

அது, நில்!”

அவள் நிற்கவில்லை - போய் விட்டாள்; போயே போய் விட்டாள்.

மேலே என்ன செய்வதென்று தோன்றவில்லை கல்யாணிக்கு, ஒரு கணம் விழித்தாள். மறுகணம், ‘பிடியுங்கள் அவளை ‘ என்று கத்த வேண்டும்போல் தோன்றிற்று அவளுக்கு.

கத்தினால் அவளை யாராவது பிடித்து விடுவார்கள்; பிடித்தால் இந்தக் குழந்தையின் மர்மம் அவளால் வெளியாகலாம்.

ஆனால்...

அப்படி வெளியாகும் மர்மம் தனக்கு மட்டுமா தெரியப் போகிறது? அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு மல்லவாத் தெரிந்து விடும்?

தெரிந்தால் என்ன? குற்றவாளி அவளா, நானா?

அது எப்படி அவள் மட்டும் அந்தக் குற்றத்தைச் செய் திருக்க முடியும்? அவளுடன் வேறு யாராவது ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தால்தானே அவளால் அந்தக் குற்றத்தைச் செய்திருக்க முடியும்?

அந்த ஒருவர் ஒருவேளை இவராக இருந்து விட்டால்...