பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 119

ஒன்றும் புரியவில்லை எனக்கு. ஒருவேளை அருகி லிருப்பது அவருடைய மனைவியாயிருக்குமோ? அவள் ஊற்றிக்கொடுக்க, அவர் அருந்துவது பழரசமாயிருக்குமோ?

இப்படி நான் நினைத்தேனோ இல்லையோ, அங்கிருந்து கிளம்பியது ஒரு பாட்டு - ஆம் பாடியவர் பேராசிரியர்தான்.

‘மோடி கிறுக்குதடி தலையை - நல்ல

மொந்தைப் பழைய கள்ளைப் போல’ இதைப் பாடிவிட்டு அவர் சொன்னார். ‘தரித்திரம் பிடித்தவன், பாரதி பாடவே பாடினானே - வைன், விஸ்கி, பிராந்தி, பீர் என்று ஏதாவது பாடக் கூடாதோ? பழைய மொந்தைக் கள்ளாம் - தரித்திரம், தரித்திரம்’

இதைக் கேட்டுவிட்டு அவள் சொன்னாள்: தேசப்பற்று மிக்கவனல்லவா, பாரதி அதிலும் சுத்தசுதேசியாயிருந்திருக்கிறான்’

இந்த உரையாடலில் என்ன நகைச்சுவையைக் கண்டார்களோ, இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அதற்குப்பின் மோடி தலையைக் கிறுக்க, அவர் சொன்னார்.

‘வாழ்வு என்பது ஒரு கலை - அந்தக் கலையை உள்ளது உள்ளபடி அறிந்து, அதைப்பரிபூரணமாக அனுபவிப்பவர்கள் விதேசிகள்தான் ; சுதேசிகள் அல்ல!”

தன்னையறியாமல் தன்னுடைய மேலாடை நழுவிக் கீழே விழ, அவள் சொன்னாள்:

‘அதனால்தான் தமிழை வெறும் பிழைப்புக்காக மட்டுமே நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது!"