பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 133

கணவருக்கு அவள் அறிமுகம் செய்துவைத்துவிட்டு உள்ளே சென்றாள். அவள் வரும்வரை நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். ‘எனக்கென்னமோ இந்தப் பிறந்த நாள் விழாவே பிடிப்பதில்லை!” என்றார் அவர். அப்போது இறந்தநாள் விழாதான் பிடிக்குமோ? என்று கேட்டுக்கொண்டே வெளியேவந்தாள் அவள். ‘இறந்த நாளுக்கு விழா ஏது, திவசம்தான்!” என்றேன் நான், என்னுடையப் பங்குக்கு ஏதாவது சொல்லி வைக்க வேண்டுமே என்று. அதற்குள் எனக்காகக் கொண்டு வந்திருந்த நீர்மோரை எனக்கருகே வைத்துவிட்டு, அவருக்காகக் கொண்டுவந்திருந்த காபியை அவருக்கருகே வைத்தாள் அவள்.

‘ஏன், உங்களுக்குக் காபி பிடிக்காதோ? என்றார் அவர்; இல்லை; பிடிப்பதில்லை!” என்றேன் நான். உங்களுக்குக் காபி பிடிக்காத விஷயம் இவளுக்கு எப்படித்தெரியும்?” என்று அவர் கேட்டார். இருவரும் ஒரே கல்லூரியில் தானே வேலை பார்க்கிறோம் என்று நான் சொன்னேன். ‘ஒரே கல்லூரியில் வேலை பார்த்தால் காபி பிடிக்காத விஷயம் கூடத்தெரிந்து விடுமா, என்ன?’ என்றார். அவர் மேலும், இது எனக்கு என்னவோ போலிருந்தாலும் எப்படி யாவது நிலைமையைச் சமாளிக்க வேண்டுமே என்று எண்ணி, கல்லூரியில் அவ்வப்போது டீ, டின்னர் என்று ஏதாவது நடக்கிறதல்லவா? அவற்றில் கலந்துகொள்ளும் போது ஒருவருக்கு பிடிக்கும், பிடிக்காது என்பதைப் பற்றி இன்னொருவர் தெரிந்து கொள்ளலாமே என்றேன் நானும் விடாமல்.

‘நீங்கள் சொல்வது சரி; ஆனால் அதற்கும் ஏதாவது ஒரு வகையில் ஈடுபாடு இருக்கத்தான் வேண்டுமல்லவா? என்று அப்போதும் பொடி வைத்து ஊதினார் அவர். அதற்குமேல் என்ன சொல்வதென்று தெரியாமல் நான் அவளுடைய முகத்தைப் பார்த்தேன். இதில் ஒன்றும்