பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 விந்தன்

குறைச்சல் இல்லை - காபியை எடுத்துக் குடியுங்கள்; ஆறிவிடப்போகிறது என்றாள் அவள். என்னுடைய ஆத்மாவே ஆறக்கூடிய நிலையில் இருக்கும் போது, காபி ஆறினால் என்ன? என்று வெறுப்புடன் சொல்லிக் கொண்டே அவர் அதை எடுத்துக் குடித்தார். அவ்வளவு தான் இரண்டே விக்கலில் அவருடையத் தலை சாய்ந்து விட்டது அடிபாவி, என்ன காரியம் செய்து விட்டாய்? உனக்கா கண்ணகி என்று பெயர்?’ என்று நான் அலறினேன்.

‘யாரை ஏய்க்க இந்த வேஷம்? உனக்கென்று ஒரு கணவர் இருக்கும்வரை நீயும் நானும் சேர்ந்து வாழ்வ தென்பது முடியாத காரியம் என்று நேற்றுவரை எனக்கு நீங்கள் கடிதம் எழுதிக் கொண்டிருந்தீர்கள்; இன்று அவருடையக் கழுத்தில் கத்தியையே வைத்துவிட்டீர்கள்!” என்று பழியை என்மேல் சுமத்தினாள் அவள். இது அநியாயம், அக்கிரமம் இப்படியெல்லாம் நீ திட்டமிட்டுச் சதி செய்வாய் என்று தெரிந்திருந்தால் உனக்கு நான் கடிதமும் எழுதியிருக்க மாட்டேன்; உன்னுடைய வீட்டுக்கு நான் வந்திருக்கவும் மாட்டேன்!"என்று நான் கத்தினேன் ‘கத்தாதீர்; கத்தினால் போலீசாரை அழைப்பேன் என்று அவள் போனுக்கருகே சென்று நின்று என்னை மிரட்டினாள்.

அவ்வளவுதான் நான் நடுங்கிப்போனேன் - தன்னுடையக் காதலை ஏற்றுக் கொள்ளாத குற்றத்துக்காக ஒரு பெண் எனக்கு இவ்வளவுப் பெரிய தண்டனையை அளிப்பாள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை; அந்த எதிர்பாராத தண்டனை எனக்குக் கிடைக்கக்கூடிய நிலையில் அவள் என்னை வைத்துவிட்ட போது நான் என்ன செய்யமுடியும்? அவளுடையக் காதலை ஏற்றுக் கொள்வதா? அல்லது அந்தக்கணமே முடிவுகாண வேண்டிய நிலை எனக்கு. என்ன செய்வேன்? அவள் அளிக்க நினைக்கும் தண்டனையை ஏற்றுக்கெண்டால், அதுவரை பெற்று வந்த பட்டம், பதவி, புகழ் எல்லா