பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 விந்தன்

வண்டி நின்றது; ‘போய் வாருங்கள்!’ என்று சொல்லி விட்டு நான் உள்ளே நுழைந்தபோது, ‘இது நறுமணத்தின் வீடு?’ என்று கேட்கும் கண்ணகி அம்மையாரின் குரல் என் காதில் விழுந்தது.இவர்கள் ஏன் இங்கே வந்தார்கள் என்று ஒன்றும் புரிய வில்லை எனக்கு; திரும்பி ராமமூர்த்தியைப் பார்த்தேன்.

அப்பொழுதுதான் காரைக் கிளப்புவதில் முனைந்து கொண்டிருந்த அவர், “கடவுள் உங்கள் பக்கத்தில் தான் இருக்கிறார் அம்மா, கடவுள் உங்கள் பக்கத்தில்தான் இருக்கிறார்!’ என்றார் தம் தோள்களை ஒரு குலுக்குக் குலுக்கி.

“அப்படி ஒருவர் இருக்கிறாரா? - சரி, இருக்கட்டும்; இருப்பவர்களையெல்லாம் விட்டுவிட்டு அவர் ஏன் இப்போது எனக்குப் பக்கத்தில் வந்திருக்கிறார்?”

‘உண்மையான பேராசிரியரை உங்களுக்குக் காட்டு வதற்காக!’

‘அதற்காகப் போயும் போயும் கண்ணகி அவதாரம் தானா எடுக்கவேண்டும், அவர்?”

‘அன்று நீங்கள் பார்த்த கண்ணகி வேறு; இன்று பார்க்கப் போகும் கண்ணகி வேறு”

‘அதையும்தான் பார்த்து விடுகிறேனே!’ என்று நான் மறுபடியும் திரும்பினேன்.

“எது நடக்கக் கூடாது என்று பேராசிரியர் நினைத் தாரோ, அது நடந்துவிட்டது அம்மா, அது நடந்து விட்டது!” என்றார் ராமமூர்த்தி. *

‘எதைச் சொல்கிறீர்கள், நீங்கள்?’ என்று நான் கேட்டேன்.