பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 163

‘உங்களுடைய சந்திப்பைத்தான்!”

‘அதற்காகத்தான் என்னைக் கொண்டுபோய் வீட்டில் விட்டுவிடும்படி அவர் உங்களிடம் காரைக் கொடுத்து அனுப்பினாரா, என்ன?”

‘இல்லாவிட்டால் இத்தனை நாளும் பிறக்காத கருணை இன்று ஏன் பிறந்திருக்கப் போகிறது?” என்றார் அவர், சிரித்துக்கொண்டே.

அதற்குள், ‘வாம்மா, வா! உன்னைத்தேடித்தான் நான் வந்திருக்கிறேன்!"என்று நான் வரவேற்பதற்குப் பதிலாக கண்ணகி அம்மையார் என்னைவரவேற்கவே, ‘இனி நான் உங்களுக்குக் குறுக்கே நிற்க விரும்பவில்லை!” என்று சொல்லிவிட்டு ராமமூர்த்தி போய்விட்டார்.

பேராசிரியரின் விருப்பத்துக்கு நேர் விரோதமாகப் பிரித்துவைக்கச் சொன்னவர்களைச் சேர்த்துவைத்து விட்டதில் தான் அவருக்கு எவ்வளவு மகிழ்ச்சி அவருடைய தலை மறைந்ததும், “இந்த வீட்டில் உன்பாட்டியைத் தவிர வேறு யாரும் இல்லையே!’ என்று கண்ணகி அம்மையார் என்னைக் கேட்டார்.

“இருக்கிறார்; என் அண்ணா இருக்கிறார்!” என்றேன் நான்.

“அது தெரியும், எனக்கு அவர் இப்போது வீட்டில் இல்லையல்லவா?”

‘இல்லை!”

‘சரி, வா; மாடிக்குப் போவோம்!’ என்று என்னை அழைத்துக்கொண்டு அவர் மேலே சென்றார்.அங்கே அவர் சொன்ன கதை என்னுடைய நெஞ்சைத் தொட்டது; இதயத்தைச் சுட்டது.