உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 15

அதற்குள் உள்ளே போடப்பட்ட தாழ்ப்பாளைத் தள்ளிக் கதவைத் திறக்க முயன்று தோல்வியடைந்த ராமமூர்த்தி, ‘இதெல்லாம் என்ன விளையாட்டு ‘ என்று கத்தினான். கல்யாணி கதவைத் திறந்து ‘உங்களிடம் விளையாடக் கூடவா எனக்கு உரிமையில்லை’ என்றாள் அழுத்தலாக,

அது அவன் உள்ளத்தைச் சுடுவதுபோல் இருக்கவே, ‘அதற்கில்லை, கல்யாணி இது குளிர் காலமல்லவா? இங்கே தண்ணிரைத் தலையில் கொட்டிக்கொண்டு நிற்க முடியவில்லை’ என்றான் கோபத்தை அடக்க.

‘நிற்கத்தானே முடியவில்லை? என் வேலை முடிந்து விட்டது; இப்பொழுது எங்கே வேண்டுமானாலும் ஒடுங்கள்!’ என்று தன் வேலையை முடித்துக் கொண்டு கல்யாணி வெளியே வந்தாள்.

‘என் வேலையும் முடிந்துவிட்டது, அம்மா! நான் வீட்டுக்குப் போய்விட்டு வருகிறேன்!” என்று சொல்லிவிட்டுச் சென்றாள் விசாலம்.

2. கடிதம் சொல்லாத கதை

பொய் - அதைப் போன்ற ஓர் உத்தமத் தோழன் மனிதனுக்கு வேறு யாராவது உண்டா? அது அவனை எத்தனை விதமான தர்ம சங்கடங்களிலிருந்தெல்லாம் காப்பாற்றுகிறது?

உண்மைக்கு ஒரு கதை அரிச்சந்திரன் கதையாயிருக் கலாம். ஆனால் கடைசிக் கட்டத்தில் பரமசிவன் வந்து கைகொடுப்பார் என்ற நம்பிக்கை இந்தக் காலத்தில்