பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 185

சொன்னார். ஏனெனில், ஒர் ஆண்மகன் தொட்டவுடன் ஒரு பெண் மகள் பட்டுப்போவதை அவர் விரும்பவில்லை; வேறொருவனால் துளிர்க்க வாய்ப் பிருக்கும்போது அவள் ஏன் துளிர்க்கக்கூடாது என்று அவர் கேட்கிறார். அத்துடன், ஒருத்தி ஒருவனோடு இருக்கும் வரைக் கற்பை அனுசரித்தால் போது மென்றும், அந்த ஒருவன் தன்னை விட்டுப் பிரிந்தோ அல்லது மறைந்தோ போனபின்னர் அவள் இன்னொரு வனுடன் கூடி வாழ்ந்து, அதே கற்பை அனுசரிப்பதில் தவறில்லை யென்றும் அவர் சொல்கிறார். எனக்கும் அது சரியென்றே படுகிறது. இல்லாவிட்டால் பேராசிரியனைப் போன்ற காமுகர்களின் வயப்பட்டுக் கற்பிழந்த உன்னைப் போன்ற கன்னிப் பெண்களுக்கு இந்த உலகத்தில் வாழ்வே கிடையாது!

‘மன்னியுங்கள், அம்மா, ‘எப்படியாவது வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நீங்கள் சொல்வது சரி; ஆனால் நானோ இப்படித்தான் வாழவேண்டும்’ என்று நினைப்பவள் - எனக்கு அது சரிப்பட்டு வராது!”

அப்படியானால் இவ்வளவு தூரம் நடந்த பிறகுமா நீ அவனைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்று நினைக்கிறாய்?”

“ஆம், முடிந்தால்!’ ‘இல்லாவிட்டால்?” “கொஞ்சம் பொறுத்திருந்துப் பாருங்கள்!” ‘எதை உன் பிணத்தையா?” - ‘அதை இப்போது சொல்ல நான் விரும்பவில்லை!” ‘அதற்காக அவனை வெளியே விட்டு வைத்தால் என்ன ஆகும் தெரியுமா? முதலில் அவன் என்னை வேலை தீர்க்கப்பார்ப்பான்; இரண்டாவதாக உன்னை வேலை தீர்க்கப் பார்ப்பான்..."