பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 விந்தன்

‘இனி அதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும், நமக்கு?”

அவ்வளவுதான்; ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்து விட்டது அவர்களுக்கு. ‘நாசமாய்ப்போச்சு, போ இனி நீ என்ன சொன்னாலும் சரி, அவனை நான் போலீசார் வசம் ஒப்படைக்காமல் விடப்போவதில்லை; அப்படி விட்டால் அது நாம் பெண் குலத்துக்குச் செய்யும் துரோகமாகும்!” என்று சொன்ன வேகத்தில் கதவைப் படாரென்று திறந்துக்கொண்டு வெளியே சென்றார்கள்.

அதற்குப்பிறகு அவர்களிடமிருந்து வந்த ஒரு கடிதம் - கடிதமா அது 2 நீங்களே படித்துப் பாருங்கள்:

‘செல்வி நறுமணத்துக்கு”

இனி நீ செத்தாலும் பரவாயில்லை என்று நினைத்தே நான் உனக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அந்தப் பேராசிரியனைப் பொறுத்த வரை என்னுடையக் கடைசி முயற்சியும் தோல்வி யடைந்துவிட்டது - ஆம் அதிர்ச்சி தரும் செய்தி அது! - கடைசி நிமிஷத்தில் தான் பெற்ற செல்வங்கள் இரண்டுடன் யாரோ ஒரு தாய் கண்ணில் நீருடன் எனக்கு முன்னால் தோன்றி, ‘தாலிப் பிச்சை கொடுங்கள்; எனக்காகக் கொடுக்கா விட்டாலும் இந்தக் குழந்தைகளுக்காகவாவது கொடுங்கள் என்று என்னைக் கேட்டால் எனக்கு எப்படியிருக்கும்? - கொடுத்துவிட்டேன்!

என்ன, இன்னுமா புரியவில்லை உனக்கு? அவன் பிரம்மச்சாரியல்ல; ஏற்கெனவே கல்யாண மானவன் என்ன, புரிந்ததா?