பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 விந்தன்

வேதனைதானா உங்களுக்குப் பெரிது?’ என்று விம்மினாள்; விம்மி, “என்னுடைய வேதனையாவது பசி வேதனை; உங்களுடைய வேதனை அதைவிடப் பெரிய வேதனையாச்சே, தாத்தா!’ என்று வெடித்துக் கதறினாள்!

கிழவன் சிரித்தான்; சிரித்து, ‘நான்தான் அப்போதே சொல்லிவிட்டேனே, அம்மா - ‘வலித்தால் கடவுளுக்குத் தான் வலிக்கும் என்று! இப்போதும் அதைத்தான் சொல்கிறேன், வேதனையிருந்தால் கடவுளுக்குத்தான் வேதனையாயிருக்கும்!’ - நீ எழுந்து போ; போய் அந்த மூட்டையை எடுத்துக்கொண்டு வா!’ என்றான் அவளுடையத் தலையைக் கோதி விட்டபடி.

அதே சமயத்தில் ‘அரிக்கேன் லாந் தரைக் கையில் பிடித்த வண்ணம் தங்கச்சி வெளியே வந்து, ‘அக்கா, இங்கே பார் அக்கா!’ என்றாள், குறுநகையுடன்.

தலையைத் தூக்கிப் பார்த்தாள் நறுமணம். தன் கையிலிருந்த சுண்ணாம்புக் கட்டியைக் கொண்டு, ‘சாப்பாடு தயார்!’ என்று அவள் சுவரில் எழுதிக் காட்டி விட்டுச் சிரித்தாள்.

‘ஏன் தாத்தா, நீங்கள் படிக்கவில்லையென்றாலும் தாழம்பூவைப் படிக்க வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே?” என்றாள் நறுமணம், வியப்புடன்.

‘அந்தக் குற்றத்தை நான் செய்யவில்லை, அம்மா! செய்தவன் அவளுடைய அத்தான்!”

“அத்தான் வேறு இருக்கிறாரா, தாழம்பூவுக்கு?” ‘இருக்கிறார், இருக்கிறார்!” “என்ன வேலை அவருக்கு?"