பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 61

டாக்டர் வாய்விட்டுச் சிரித்தார்; ‘பக்குவமடையாத தம்பி, என் தம்பி பக்குவமடை யாத தம்பி!’ என்று சொல்லிக்கொண்டே அவனைக் கட்டிப் பிடித்து, அவன் முதுகைத் தடவிக் கொடுத்தார்.

‘பக்குவமடைந்தவரைப் போதும்; இந்தாருங்கள் கடிதம், நான் வருகிறேன்’ என்று அவருடைய பிடியி லிருந்து விலகி, தன் கையிலிருந்த கடிதத்தை அவருக்கு முன்னால் விட்டெறிந்துவிட்டு, அவன் திரும்பினான்.

‘அமைதி, அமைதி!’ என்று கையமர்த்திக் கொண்டே கடிதத்தைக் குனிந்து எடுத்தார் டாக்டர்.

‘அமைதி சுடுகாட்டிலல்லவா நிலவ வேண்டும் என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டே நின்றான் ராமமூர்த்தி.

‘டார்ச் லைட் ’டின் உதவியுடன் பேராசிரியர் கடிதத்தைப் படித்தார்.

போலீஸாருக்கு:

என்னுடைய தற்கொலைக்கு நானேதான் காரணம், வேறு யாரும் அல்ல.

தயவு செய்து என் பிரேதத்தை எந்தவிதமான சோதனைக்கும் உள்ளாக்காமல், என் பாட்டியிடம் ஒப்படைத்து விடுங்கள்.

இப்படிக்கு:

நறுமணம்.

படித்து முடித்ததும் கடிதத்தை மடித்துச் சட்டைப் பைக்குள் வைத்தார் பேராசிரியர். ‘சிரிக்கவில்லையா, அந்தக் கடிதம் நம்முடைய சின்னத்தனத்தைப் பார்த்துச் சிரிக்கவில்லையா?” என்று கேட்டான் ராமமூர்த்தி,