பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 63

தொடங்கி விடாதே!’ என்றார் டாக்டர், இங்குமங்கும் பார்த்துக் கொண்டே.

‘இன்னுமா ஐயப்பாடு, உங்களுக்கு? இதோ பாருங்கள். அந்தத் தெய்வத்தின் குருதி!’ என்று ரத்தம் சிந்தியிருந்த ஒர் இடத்தைத் தன் கையால் தொட்டுக் காட்டினான் ராமமூர்த்தி.

‘இருக்காது; இந்தக் குருதி அவளுடையக் குருதியாயிருக்காது இதற்குள் போலீஸார் வந்து அவளுடைய சவத்தைக் கைப்பற்றியிருக்க முடியுமா, என்ன?”

“அவர்கள் கைப்பற்றுவதற்கு அந்தத் தெய்வத்தின் ஓர் எலும்புகூடக் கிடைக்காமற் போய்விட்டதோ, என்னமோ?”

‘'நான் நம்பவில்லை; அந்த அளவுக்கு அவள் உடல் முழுவதும் நசுங்கியிருக்கும் என்பதை நான் நம்பவில்லை!”

“எதைத்தான் நம்புகிறீர்கள், இதை நம்ப9’ முகத்தைத் திருப்பிக்கொண்டான் ராமமூர்த்தி.

‘தம்பி, தற்போது நீ உணர்ச்சியின் உச்சக் கட்டத்தி லிருக்கிறாய்! இந்த நிலையில் நாம் இருவரும் மேலும் மேலும் பேசிக் கொண்டிருப்பது உனக்கும் நல்லதன்று: எனக்கும் நல்லதன்று. இத்துடன் இன்று நாம் பிரிந்து விடுவோம்; நாளை மறுபடியும் சந்திப்போம்!” என்று அவன் முதுகில் மீண்டும் தட்டிக் கொடுத்தார் குருநாதர், தன் முதுகில் எங்கே அவன் தட்டிக் கொடுத்துவிடப் போகிறானோ என்ற அச்சத்தில்!

“வணக்கம்’ என்று இடையே வந்த ‘க்'கன்னாவுக்குக் கொஞ்சம் கூடுதலாகவே அழுத்தம் கொடுத்துவிட்டு, நடையைக் கட்டினான் சீடன்!