பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 71

‘அந்தக் கண்ணால் இந்தக் குழந்தையைப் பார்த்தால் என்னவென்று தெரிகிறது. * +

‘யாரோ ஒரு பெண் என்று தெரிகிறது!”

‘அது போதும்; உதவுவது என்று நான் நினைத்தேன், உதவினேன் - அவ்வளவுதான்!” என்றான் கிழவன்.

‘அதனால் உங்களுக்கு ஏதாவது சங்கடம் வந்துச் சேர்ந்தால்?’ என்று அவனைக் குறுக்கு விசாரணை செய்தான் தறுதலை.

‘அந்தச் சங்கடம் இந்தக் குழந்தையால் வந்தது என்று நான் நினைக்க மாட்டேன்; கடவுளால் வந்தது என்று நினைப்பேன்!” என்றான் கிழவன், கம்பீரமாக.

அதுவரை அந்தக் கிழவனையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த நறுமணம், “தாத்தா!’ என்று கத்தினாள், திடீரென்று.

‘என்னம்மா, என்ன? என்று பதறினான் கிழவன்.

‘ஒன்றுமில்லை தாத்தா, ஒன்றுமில்லை’ என்று சொல்லிக் கொண்டே தலை குனிந்தவள், ஒருகணம் மெளனமாயிருந்தாள். பிறகு, ‘எவ்வளவு உயரத்தில் இருக்கிறீர்கள் நீங்கள், எங்களையெல்லாம்விட எவ்வளவு உயரத்தில் இருக்கிறீர்கள் நீங்கள் உங்களை எங்களால் அண்ணாந்துகூடப் பார்க்க முடியாது போலிருக்கிறதே, தாத்தா!’ என்றாள் அமைதியாக.

“என்னம்மா சொல்கிறாய், நீ? என்றான் கிழவன், ஒன்றும் புரியாமல்.

‘புரிய வேண்டாம் தாத்தா, உங்களுக்குப் புரியவே வேண்டாம் - எல்லாவற்றையும் புரிந்து கொண்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் நாங்கள் வேண்டுமானாலும்