பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 விந்தன்

காட்டாதீர்கள்!” என்று சொல்லிவிட்டு, எங்களைப் பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றாள் பாட்டி.

ஆயினும் என்ன? - நமது அன்புக்குரியவர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அருகில் இருப்பது போலவும், அல்லாதவர்கள் எவ்வளவு அருகில் இருந்தாலும் தூரத்தில் இருப்பது போலவும் தோன்றுவதில்லையா, நமக்கு? - அப்படித்தான் தோன்றிற்று, எங்களுக்கும்!

இப்படியாகத்தானே எங்களுடைய சாப்பாட்டுப் பிரச்சினையை ஒருவாறு தீர்த்து வைத்து விட்ட அப்பாவுக்கு, அன்றிரவு எங்களைப் படுக்க வைக்கும் பிரச்சினை பெரிய பிரச்சினையாகப் போய்விட்டது. இத்தனை நாட்கள் பாட்டி எங்களுக்குத் துணையாகப் படுத்து வந்தாள்; இன்று யார் படுப்பது?

அப்பா என்னமோ எங்களுக்காகத்தான் சித்தியைக் கல்யாணம் செய்து கொண்டதாகச் சொல்கிறார்; ஆனால் சித்தி எங்களுக்காக அப்பாவைக் கல்யாணம் செய்து கொண்டதாகச் சொல்லவில்லையே?

பாட்டியின் தலை மறைந்ததும், ‘'சாப்பிட வருகிறீர்களா?’ என்றாள் அவள், அப்பாவை நோக்கி,

‘'வேண்டாம், எனக்கென்னமோ இன்று பசிக்கவில்லை!” என்றார் அப்பா.

‘எப்படிப் பசிக்கும்? ஆபீஸில் மேல் வரும்படி: வழியில் எத்தனையோ ஒட்டல்கள்!’ என்று சொல்லிக்கொண்டே சென்று அவள் சாப்பிட்டுவிட்டு, ‘அம்மா, நறுமணம்! அருமை அண்ணாவுக்குச் சாப்பாடு போடு; நீயும் சாப்பிடு!” என்று வழக்கம்போல் எனக்குக் கட்டளையும் இட்டுவிட்டுப் படுக்கப் போய்விட்டாள்!