பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 விந்தன்

‘'அப்பா சாப்பிட்ட பிறகுதான் நானும் சாப்பிடுவேன்!”

‘அவர்தான் ஒட்டலில் சாப்பிட்டுவிட்டு வந்து விட்டாராமே?”

‘யார் சொன்னது, அவரா சொன்னார்?” ‘இல்லை சித்தி சொன்னாள்!” ‘அதை நீ நம்புகிறாயா?” ‘நம்பாவிட்டால் இந்த வீட்டில் நாம் இருக்க முடியாது!’

‘அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. அப்பா வரட்டும், சாப்பிடுகிறேன்!” என்றான் அவன், அழுத்தந் திருத்தமாக.

அதற்குள் சித்தி சாப்பிட்ட தட்டை அலம்பி வைத்து விடலாமென்று நான் அடுக்களைக்குள் நுழைந்தேன் ஆம், அவள் சாப்பிட்ட தட்டைக்கூட நான்தான் கழுவவேண்டும் - என்னுடைய நித்ய கடமைகளில் அதுவும் ஒன்று!

அந்தக் கடமையை ஆற்றிவிட்டு நான் வெளியே வந்தபோது கையில் தலைவலி மாத்திரையுடன் உள்ளே நுழைந்த அப்பா, ‘கொஞ்சம் வெந்நீர் இருந்தால் கொண்டு வருகிறாயா?” என்றார்.

நான் தலையை ஆட்ட விட்டு உள்ளே சென்றேன்.

‘ஏண்டா நம்பி, நீ சாப்பிட்டுவிட்டாயா?” என்று கேட்டார் அப்பா.

அதற்குள் கையில் வெந்நீருடன் வெளியே வந்த நான்,

‘இல்லை அப்பா, நீங்கள் சாப்பிட்டப் பிறகுதான் அவன் சாப்பிடப்போகிறானாம்!’ என்றேன்.