பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 85

அப்பா சிரித்தார்; சிரித்துவிட்டு, ‘அன்பை எங்கே தேடவேண்டுமோ அங்கே தேடாமல் வேறு எங்கேயோ தேடினேன்,பார் - எனக்கு வேண்டும்; நன்றாக வேண்டும்!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். பிறகு தலைவலி மாத்திரையை விழுங்கிவிட்டு, ‘அப்பா ஒரு தலைவலி போச்சு!” என்றார் சற்று ஆறுதலுடன்.

‘ஒரு தலைவலி போச்சு என்றால், இன்னொரு தலைவலி வேறு இருக்கிறதா அப்பா?’ என்றான் நம்பி, ஒன்றும் புரியாமல்.

‘இருக்கிறது அப்பா, இருக்கிறது!” என்றார்.அவர் அலுப்புடன்.

‘அது எப்போது போகும்? அதற்கு ஏதாவது மாத்திரை உண்டா?”

‘அதற்கு மாத்திரையும் கிடையாது; அது எப்போது போகுமென்றும் தெரியாது - நீ வா, சாப்பிடுவோம்!” என்று அப்பா எழுந்தார்.

அவர்கள் இருவருக்கும் சாப்பாட்டைப் போட்டு விட்டு நான் சாப்பிடும்போது மணி பத்து - அடேயப்பா இப்போதே மணி பத்தாகி விட்டதே? எப்போது வீட்டுக் கணக்கைப் போடுவது, எப்போது தூங்குவது, எப்போது எழுந்திருப்பது? என்று எண்ணிக்கொண்டே அவசர அவசரமாகச் சாப்பிட்டேன்.

அதற்குள் ஒரு சிறு துயில் நீத்து வந்த சித்தி, “என் கையால் சாப்பிட உங்களுக்குப் பிடிக்கவில்லையாக்கும்?” என்றாள், கையலம்பிக் கொண்டிருந்த அப்பாவிடம்.

‘அதெல்லாம் ஒன்றுமில்லை, காமினி அப்போது பசிக்கவில்லை; சாப்பிடவில்லை - இப்போது பசித்தது சாப்பிட்டேன்!’ என்றார் அப்பா, கையும் களவுமாக அகப்பட்டுக் கொண்ட கள்வனைப் போல!