பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

பவர்களின் மன அமைதியையும் குலைப்பவர்களாய்த் தான் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறதல்லவா? - இது என் எழுத்தின் வெற்றி என்னுடைய எழுத்தை விரும்பிப் படிக்கும் இதயமுள்ள மக்களின் வெற்றி!

இந்த வெற்றியால் மற்றவர்களுக்குக் கிடைக்கும் வாழ்க்கை வசதிகள் எனக்குக் கிடைக்காமல் இருக்கலாம்... அதற்காக என்னுடைய எழுத்தையே நான் மாற்றிக் கொண்டு விடவேண்டுமா, என்ன? - அது என்னால் முடியாத காரியம்.

முடிந்தால்....

கற்பனையிலிருந்து நான் கதைகளை மட்டும் சிருஷ்டித்தால் போதாது; அவற்றைப் படிப்பதற்கு வாசகர்களையும் கற்பனையிலிருந்தே சிருஷ்டிக்க வேண்டும்... என்றால் முடியாதய்யா என்னால் முடியாது!

ஏனெனில்....

‘இலக்கியம் கற்பனையிலிருந்து பிறக்க வில்லை; வாழ்க்கையிலிருந்து தான் பிறக்கிறது!’ என்று நான் நினைக்கிறேன். அவ்வாறு பிறக்கும் இலக்கியம் எப்படி இருக்கும்?. “இந்தப் பத்திரிகையில் வெளியாகும் கதை, கட்டுரைகளில் காணப்படும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனை, யாரையும் குறிப்பிடுபவனல்ல’ என்று பத்திராதி பதிகள் தற்காப்பு"க்காகத் தங்கள் பத்திரிகையின் முதல் பக்கத்திலேயே போட்டுக் கொண்டாலும், யாரையாவது எதையாவது குறிப்பிடு வனவாய்த்தான் இருக்கும்... அதற்கு நானா பொறுப்பு?

ஒன்று வேண்டுமானால் செய்யுங்கள் - போலீஸ் காரன் திருடமாட்டான், இன்ஸ்பெக்டர் எந்த ஆதாயத்தை முன்னிட் டும் அதை மறைக்க மாட்டார், வக்கீல் பொய் சொல்ல மாட்டார், நீதிபதி அந்தப் பொய்யை