பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 விந்தன்

இங்கேயும் இருக்க முடியாமல் தவியாய்த் தவித்தார். அவருடையத் தவிப்பை ஒருவாறு புரிந்துக் கொண்ட நம்பி, ‘நீங்கள் போங்கள், அப்பாஇனி நறுமணத்துக்கு நான் துணை; நறுமணம் எனக்குத் துணை’ என்றான் கம்பீரமாக - சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை tJf ?

அன்றிலிருந்து அவன் என்னமோ எனக்குத் துணை யாகத் தான் இருந்து வந்தான். ஆனால் அவனுக்கு நான் துணையாயிருந்து வரவில்லை; தொந்தரவாயிருந்து வந்தேன்.

குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு வரையிலாவது நான் படித்துவிட வேண்டுமென்பது அவன் ஆசை. அந்த ஆசையைக் கூட நிறைவேற்றி வைக்கத் தயாராயில்லை, என் சித்தி. நான் பள்ளிக்குக் கிளம்பும்போதெல்லாம். ‘படித்தது போதும், வேலையைப் பார் படித்தது போதும் வேலையைப் பார்!” என்பாள் அவள்; “வேலை செய்தது போதும் பள்ளிக்கூடம் போ வேலை செய்தது போதும், பள்ளிக்கூடம் போ!’ என்பான் அவன்

இந்தப் போட்டியிலும் பூசலிலும் பட்டும் படாமல் இருந்து வந்த அப்பா, பாட்டிகேட்டுக் கொண்டபடி எங்களைப் பெங்களூருக்காவது அனுப்பி வைக்கத் துணிந்தாரா என்றால் இல்லை; ‘ஊர் என்ன சொல்லுமோ, உலகம் என்ன சொல்லுமோ?’ என்று தனக்குத்தானே குமைந்து கொண்டிருந்தார்.

அதற்கும் ஒரு வழிக் கண்டுபிடித்தான், நம்பி. அந்த வருடம் பரீட்சை முடிந்து கோடை விடுமுறை விட்டதும், “அப்பாப்பா இந்த வருஷம் விடுமுறை வரையிலாவது நாங்க பெங்களூருக்குப் போய் இருந்துவிட்டு வரட்டுமா, அப்பா?’ என்றான் அவன். அவரும் “தாராளமாகப் போய்