பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 89

வாருங்கள்!’ என்றுத் தயங்காமல் சொன்னார். அவர், இடையிலே உள்ள இரண்டு மாதக் காலமாவது மேலும் கொஞ்சம் நிம்மதியாயிருக்கலாமென்ற நோக்கத்துடன்.

அவ்வளவுதான்; மாமாவை ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்குமாறு அன்றே பாட்டிக்குக் கடிதம் எழுதிப் போட்டு விட்டு, அதற்கு அடுத்த நாளே அப்பாவை ஸ்டேஷன் வரை துணைக்கு அழைத்துக் கொண்டு போய்த் திருப்பி அனுப்பி விட்டு, நாங்கள்.இருவரும் சிட்டாய்ப் பறந்தோம், பெங்களுருக்கு ஆம், இனித் திரும்புவதில்லை, சென்னைக்கு என்ற தீர்மானத்துடன் தான்

அந்தத் தீர்மானத்தையும் அப்பாவுக்குத் தெரிவிக்கத் தயங்கவில்லை, நம்பி;

அருமை அப்பா,

எதையும் செய்வதற்கு முன்னால் யோசிக்காமல், செய்த பின் யோசிப்பது தங்களுடைய இயல்பாகப் போய்விட்டது. இதனால் தாங்கள் எண்ணற்ற இன்னல் களுக்கு உள்ளா வதோடு, எங்களையும் அந்த இன்னல் களுக்கு உள்ளாக்கி விடுகிறீர்கள். அவற்றைத் தங்களுக் காகச் சகித்துக்கொள்ள நாங்கள் தயாராயிருந்தாலும், சித்திக்காகச் சகித்துக் கொள்ளத் தயாராயில்லை.

என்ன இருந்தாலும் சிறகு முளைத்த பறவைகளாகி விட்டோம், நாங்கள்! - இனி பறக்க வேண்டியதுதானே? - பறந்துவிட்டோம்!

எங்களுக்கென்று ஒரு சிறு கூட்டைக் கட்டிக் கொள்ளும் வரை பிறந்தக் கூட்டில் இருக்க முடியாமற் போனாலும், புகுந்தக் கூட்டிலாவது இருக்கமுடியுமென்று நம்புகிறோம். எனவே, இப்போதைக்கு எங்களை மறந்து விடுங்கள்.