பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C9)

பாடப் பிறந்த பழஞ்சபை மாணவன் மூடப் பழக்கஞ் சாடிய பாவலன் . இலக்கியம் நிலமா இலக்கணம் அரணாக் கவிதை கோலாக் கற்பனை கொடியா வெல்க தமிழெனும் விறற்கொடி பொறியா யாப்புப் படையா நல்லணி துணையாப் புரட்சி முரசாப் புதுமை துடியாத் தமிழை இகழ்வார் தன்னுயிர்ப் பகையா அல்மொழி திணிப்பார் வல்வர வெதிர்த்துத் தொடுமொழிப் போரில் தும்பை சூடியோன் மொழியர சோச்சும் முதல்முடி யரசன் குடியரசு போற்றுங் கொள்கை யோனே

- முனைவர் வ.சுப. மாணிக்கனார்

முடியரசர் இவரென்றால் மக்களெங்கே?

முன்னோடும் பரி எங்கே? படைக ளெங்கே? முடிஎங்கே? அரசெங்கே? முரச மெங்கே?

முத்தமிழில் ஒரு தமிழ்தான் முடியோ! மற்ற இடைத்தமிழ்தான் அரசோ! மூன் றாவதான

எழிற்றமிழ்தான் முரசோ! ஓ! சரிதான் இந்த முடியரசர் பாவரசர் பாடுகின்றார் நாம்

முழங்காலை நிலந்தாழ்த்தி வணங்கிக் கேட்போம்! மும்முடியை ஒர் தலையில் முடித்த முடியரசர் எம்முடியும் தலை வணங்கும் இயற்கையிலே கவிஞர் தம்மரிய கவிதையினால் கவியரசர் ஆனார் தாய்த் தமிழே அவர் முடியை உனக்குத்தான் சாய்ப்பார்.

- கவிஞர் கண்ணதாசன்