பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி ஒழிய வேண்டும் எனக் கவிதையிலும், மேடையிலும் முழங்கிய கவிஞர்களுள், அவற்றைத் தன் வாழ்வில் கடைப்பிடித்தவர், கவிஞர் முடியரசனார் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? எனத் தெரியவில்லை....

- தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வாதிகளுள் இணையற்றவர் கவியரசர் முடியரசனார்.

- முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்.

பாரதியார் என்ற வித் தி லிருந்து மு ைளத்த து பாரதிதாசன் என்ற செடி. அச்செடியில் தழைத்தது முடியரசன் என்ற கொடி....

அவர் இயற்றிய கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும். தன்மானச் சுடராக - கவிஞர்களிடையே ஒர் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் கவியரசர் முடியரசனார்.

- பேராசிரியர் க. அன்பழகன்

வேத்தவைப் பாவலரும் வேற்று மொழிகலக்குந் தீத்திறக் காலை தெளிமருந்தே - மூத்த முடியரச ரின்றி மொழிவனப்புச் செய்யும் முடியரசன் செய்யுள் முறை.

- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்