பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21-ஆம் அகவை முதல் சமுதாயச் சூழல், மொழி, நாடு, இயற்கை இவற்றையே பாடி வந்தார் (1940)

21-ஆம் அகவையில் இயற்றிய சாதி என்பது நமக்கு ஏனோ? என்ற கவிதையே முதல் முதலில் அச்சு வாகனம் ஏறியது. இது பேரறிஞர் அண்ணாவால் திராவிட நாடு இதழில் வெளியிடப்பட்டது (1940)

தந்தை பெரியாரின் தன்மான இயக்கத் தொடர்பு (1940)

தன்மான இயக்கத் தொடர்பால் வித்துவான் தேர்வில் தோல்வியுறுமாறு செய்யப்பட்டார் (1943)

புதுவை மாநிலத்திற்கு அருகில் உள்ள மயிலத்தில் தலைமறைவாக இருந்து படித்து வித்துவான் பட்டம் பெற்றார் (1947)

- நவாபு டி.எஸ். இராசமாணிக்கம் நாடகக் குழுவில் பாடல், உரையாடல் எழுதும் பணி. அங்கிருந்த சிறை வாழ்க்கை யும், மதவழிபாட்டு முறைகளும் பிடிக்காமல் வெளியேறினார்.

சென்னையில் தமிழாசிரியர் பணி - பல்வேறு இதழ்களில் இலக்கியப்பணி - பொன்னி இதழில் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் - திராவிட இயக்கத் தலைவர்கள், தமிழறிஞர்களுடன் தொடர்பு (1947-49) தான் கொண்ட கொள்கைக்காக கைம்பெண் - கலட்டத் திருமணம்

அவ்வாறு செய்ய இயலாது” எனத் தாயார் மறுத்தல் (1948) 'சாதி மறுப்புத் திருமணம் செய்யவாவது இசைவு கொடுங்கள் என அன்னையாரிடம் வேண்டுதல். பெற்றோர் இசைதல். பெற்றோர் மூலம் கலைச்செல்வி எனும் நலத்தகையாரை பேராசிரியர் மயிலை சிவமுத்து தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார் (1949)

திருமணமான ஆண்டே தமது துணைவியாருடன் இந்தி எதிர்ப்புப்போரில் பங்கேற்றார் (1949)