பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பூங்கொடி நூலுக்குத் தமிழ்நாடு அரசு தடைசெய்ய ஏற்பாடு (1966), ஆட்சிமாற்றத்தால் பூங்கொடி தடை ஏற்பாடு விலக்கம் (1967).

தமிழாசிரியப் பணி ஒய்வு (1978)

மதுரைப் பல்கலைக்கழகம் தமிழியற் புலத்தில் நாடகக் காப்பியப் பணி (1985)

திராவிட நாடு, முரசொலி, முத்தாரம், குடியரசு, விடுதலை, போர்வாள், முல்லை, எழில், தென்றல், மன்றம், அழகு, முருகு, பொன்னி, குயில், கதிரவன், நம்நாடு, வாரச் செய்தி, பிரசண்ட விகடன், தமிழ்ப்பாவை, காதல், தாமரை, புதுவாழ்வு, தனியரசு, சங்கொலி, வாழ்வு, தோழன், திராவிடமணி, தமிழ்ச்சுவை, தமிழ், போர்முரசு, பாசறை, இன முரசு, இன முழக்கம், நித்திலக் குவியல், செந்தமிழ்ச் செல்வி, கலைக்கதிர், அமுத சுரபி, கழகக் குரல், மறவன் மடல், சமநீதி உரிமை வேட்கை, தென்னரசு, தென்னகம், தமிழ் முரசு, தமிழ்நாடு, அலை ஒசை, தமிழ்நேசன் (மலேசியா) கவிதை, முல்லைச்சரம், தமிழரசு, குங்குமம், தினமணி கதிர், தினமணி ஆகிய இதழ்களிலும் மற்றும் பல்வேறு இதழ்களிலும் கவிஞர் தமது எழுத்தோவியங்களைத் தீட்டியுள்ளார்.

கவிஞரது கவிதைகள் பல சாகித்திய அகாதமியால் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. கன்னடத்திலும், உருசிய மொழியிலும் மொழி

பெயர்க்கப்பட்டுள்ளன.

கவிஞரது நூல்கள் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு பல்கலைக் கழகங்களில் இவர்தம் நூல்கள் முனைவர் மற்றும் 'எம் ஃபில் பட்டத்திற்காகவும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.