பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாருக்குக் கடல்காவல், பைந்த மிழ்ப்பண் பாட்டுக்கு நீகாவல்; ஆழ்ந்த ஆணி வேருக்கு மண்காவல்; தமிழர் நாட்டு

வேலிக்கு நீகாவல்; பெருகி ஒடும் நீருக்குக் கரைகாவல்; கழகத் தோழர்

நெஞ்சுக்கு நீகாவல்; இந்த நாட்டில் யாருக்கு யார்காவல் என்று மக்கள்

அஞ்சிவரும் இந்நாளில் நீதான் காவல்.

மணிகொழிக்கும் பொன்கொழிக்கும் சந்த னத்தின்

மனங்கொழிக்கும் எழில்கொழிக்கும் அருவி என்பர்; அணிகொழிக்கும் பொருள்கொழிக்கும் எழில்கொ ழிக்கும் அரியதமிழ் மனங்கொழிக்கும் நினது பேச்சில்; அணில்கொறிக்கும் திங்கனிகள் தொங்கும் சாரல்

அருவியொரு ஆறாகி வளங் கொழிக்கும்; அணில்கொறித்த கனிதொங்கும் தமிழர் நாட்டை

அழகாக்கி வளமாக்கும் ஆறும் நிதான்.

எதிரிகட்கு வல்லினமாய், நின்னை அண்டி -

இருப்பவர்க்கு மெல்லினமாய், இரண்டும் இல்லா நொதுமலர்க்கோ இடையினமாய் மெய்யெ ழுத்து

நுவல்கின்ற மூவினமாய் விளங்கு கின்றாய்! மதுரைநகர்ப் பாண்டியனார் சேரர் சோழர்

மன்னர்வழி மூவினத்தின் மெய்யும் ஆனாய்! எதுவரினும் மெய்யாக விளங்கும் உன்னை

எவரெவரோ பொய்யாகப் பேசு கின்றார்!