பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடியரசன் எனும்பெயரைப் பூண்டி ருந்தும்

முடியிழந்து நிற்கின்றேன்; நீயும் இன்று முடியிழந்து நிற்கின்றாய்; ஆனால் என்போல்

முடிஒன்றும் நரைக்கவில்லை; யாண்டுப் பெற்றாய்? இடியனைய துயர்வந்து தாக்கும் போதும்

இடியாமல் சிரிப்பதனால் பெற்றாய் போலும்! முடியிழந்து நின்றாலும் மன்னா நின்றன்

முகத்தழகு சிரித்துவிளை யாடக் கண்டேன்.

பேரன்எனக் கொருவன்தான் எனினும் இன்று

பேணாத முதுமைவரத் தளர்ந்து நின்றேன்; பேரன்மார் பலரிருந்தும் தாத்தா என்று

பேர்சொல்லி அழைத்திருந்தும் இளைஞ னைப்போல் மாரனைப்போல் எழில்தவழச் சிரிக்கின் றாய்நீ;

மாமருந்து யாதுண்டாய்? உண்மை சொல்வாய்; ஊரறியச் சொலல்வேண்டா எனக்கு மட்டும்

ஒருசெவியில் சொல்லிவிடு வேண்டு கின்றேன்.

'சிரிப்பென்னும் மருந்துண்டேன் அம்மருந்தைச்

சித்தர்திரு வள்ளுவனார் தந்தாரென்று உரைக்கின்றாய் நெஞ்சுக்குள் என்செ விக்குள்

ஒருசிறிது விழக்கேட்டேன்; குறள் நூல் சொல்லி விரிக்கின்ற பொருளனைத்தும் விரித்துச் சொல்லி

விளக்கிவரும் புலவன்நான்; எனினும் இன்னும் வருத்திவரும் கலைக்கு மருந்து கண்டு

வாழ்வதற்குக் கற்கவில்லை; கலைஞன் நீதான்.