பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொங்கிஎழும் அலைக்கைகள் எடுத்துச் சென்ற

புகார்கண்டு சிரித்தவன்நீ; படைத்த சிற்பி பொங்கிவரும் மனக்களிப்பால் நின்னை நோக்கிப்

பூம்புகார்ப் பெருந்தச்சன் என்று சொன்னார்; இங்கவர்தாம் உளியொன்றும் தந்தா ரல்லர்;

ஆதலினால் மற்றொருவர் உளியை நின்பால் தங்குதடை யில்லாமல் வீசப் பெற்றுத்

தமிழகத்தை உருவாக்கும் சிற்பி யானாய்.

பேருலகில் நீசிரித்து வாழ வேண்டும்

பிறர்சிரிக்க வாழாதே என்று சொலலி, ஆரொருவர் சிரித்தாலும் அவர்சி ரிப்பை

அழித்துவிட்டுத் தாம்மட்டும் சிரித்து நிற்பார்; சீருடையாய்! நின்னுடனே பிறரும் சேர்ந்து

சிரிப்பதற்கே வாழ்வெடுத்தாய்; எளியர் தாமும் சீரடைய வாழ்வுபெறச் சிரித்து வாழச்

சிரிக்கின்றாய் வாழ்கின்றாய் வாழ்த்து கின்றேன்.

மெருகூட்டும் முகங்கொண்டார் மக்கள் மன்றில்

மெய்யேபோல் குண்டுவிடும் இயல்புங் கொண்டார் திருநாட்டின் மேல்மன்றில் எம்டன் குண்டைத்

தெரியாமல் போட்டாலும் சிரிக்கின் றாய்நீ; கருவாட்டுக் கடைதிறக்கச் சென்ற போதும்

கருவென்ப துன்பெயரை நினைவில் கூட்டத் திருநாக்கில் நரம்பின்றி நின்னைத் திட்டிச்

சிறைவைப்பேன்’ என்றாலும் சிரிக்கின் றாய்நீ.