பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழிய கவிதை

பாழியல் வகுக்கும் ஏடு

படித்திட விழையும் நாட்டில் ஏழிரண் டாண்டு காலம்

இடையறாக் கவிதை” என்னும் தாளிகை கண்ட தென்றார்;

சற்றுநான் திகைத்துப் போனேன்; வாழிய என்று சொன்னேன்

வளர்த்தவர் துணிவைக் கண்டு.

கவிதையை வளர்க்கும் பாங்கு கற்றிலா வணிக மாக்கள் செவியினிற் புகுந்து பாய்ந்து

சிந்தையைத் திருத்தும் வண்ணம் குவியிடர் உற்ற போதும்

குலைவுறாக் கவிதை என்னும் சுவடியை நல்கி நிற்கும்

தோழர்நம் தெசினி வாழ்க

அரைகுறை யாக வெந்த

அரிசியைச் சோறென் றோதிப் புரைபடும் அறிவைக் காட்டும்

போலியர் சிலராற் பாட்டின், நெறிமுறை பிறழ்தல் கண்டேன்;

நிலைதடு மாறும் அந்த உரைநடைக் கூட்ட மெல்லாம்

உணர்ந்திடக் கவிதை வாழ்க