பக்கம்:மனிதர்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J多器 சதானந்தம் பணம் எடுக்கவேண்டும் என்று பாங்குக்குப் போனார், அங்கே போனதும்தான் , திடீர் வேலை நிறுத்தம் எனத் தெரிந்தது. அகில இந்திய ரீதியில் ஒரு பொது நிறுவனம் Gurgi தேவை போன்ற சில உரிமைக்கோரிக்கைகளை முன்வைத் து வேலை நிறுத்தம் செய்துகொண்டிருந்தது. அடி ஸ்டிரைக் செய்தவர்களுக்கு ஆதரவு காட்டும் விதத்தில் பாங்குகளும் ஒரு நாள் அனுதாப வேலை நிறுத் தம்' என்று ஸ்டிரைக் செய்திருந்தது. சதானந்தம் செயலற்றவரானார். பஸ் ஸ்டாப்பில் காத்து நின்று, சிரமப்பட்டு ஒரு பஸ்சில் ஏறி, இடித்து நெருக்கி உட்புகுந்து, நின்றுகொண்டே பயணம் செய்தார். ஒடிக்கொண்டிருந்த ஒரு பஸ் திடீரென நின்றது- நிறுத் தப்பட்டது. ஒரு கல்லூரியின் மாணவர்கள், போகிற வருகிற பஸ்களை மறித்து நிறுத்தினார்கள். ஏதோ ஒரு கல்லூரியை சேர்ந்தவர்கள் சில கோரிக்கை களை முன் வைத்து, ஸ்டிரைக் செய்து கொண்டிருந்தார் கள். அவர்களுக்கு அனுதாபம் காட்டும் முறையில் வேறு மூன்று நான்கு கல்லூரிகளின் மாணவர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டார்கள், பஸ்களில் தொத்திக்கொண்டும் தொங்கிக் கொண்டும் பிரயாணம் செய்தார்கள் பல பேர். கண்டக்ட ருக்கும் மாணவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட் டது. மோதல் நிகழ்ந்தது. அதனால் மாணவர்கள் பஸ்களை மறித்து மறித்து நிறுத்தினார்கள். சில பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன. சதானந்தம் சென்ற பஸ்சுக்கும் அந்தக் கதி நேர்ந்தது. பயணிகள் அனைவரும் கீழே இறங்கும்படி கட்டாயப் படுத்தப்பட்டார்கள். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/124&oldid=855474" இலிருந்து மீள்விக்கப்பட்டது