பக்கம்:மனிதர்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 2 3 சதானந்தமும் இறங்கினார். அங்கே காணப்பட்ட சூழ்நிலை அவருடைய மனக் குமைதலை அதிகப்படுத்தியது. இப்போதைக்கு நிலைமை ஒன்றும் சீர்படாது என்று தோன்றவே அவர் நடக்கலானார். நடந்து வீடுபோய் சேர்வது என்பது கொஞ்சம் சிரமமான காரியம்தான். ஆனாலும் வேறு வழியில்லை. அப்போது அவர் உள்ளத்தில் அந்தத் தீர்மானம் உறுதிப்பட்டது. பட்டணம் இனி நமக்குச் சரிப்படாது. ஆரோக்கிய நிலைமை சீர்கெட்டு வருகிறது. வசதிக் குறை. வுகள் அதிகரிக்கின்றன. இதற்கெல்லாம் இங்குள்ள மனிதர் களின் போக்குகள்தான் காரணம். உழைக்காமலே உல்லா சங்களை அனுபவிக்க ஆசைப்படுகிறவர்கள் பெருத்துப் போனார்கள். கடமைகளை செய்ய மனம் இல்லாமல் உரிமைகளை அதிகம் அதிகமாகக் கோருவதும், அவற்றுக் காகப் போராடுவதும், சுயநலத்தோடு மற்றவர்களையும் போராடும்படி துாண்டுவதும் வளர்ந்து கொண்டே போகிறது. மனிதர்கள் சந்தோஷமாக வாழவேண்டும். அமைதி வளர்க்க வேண்டும். அவரவர் காரியங்களை ஒழுங்காகச் செய்து வாழவேண்டும். வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப்பட் டுள்ள தற்கால சமூக வாழ்வில், இருக்கிற வசதிகளையும் உரிய வகையில் அனுபவித்து அமைதியாக வாழவிடாமல் கெடுக்கிறபோக்குதான் வெறியாட்டம் போடுகிறது. இது சதானந்தத்தின் அபிப்பிராயம். அவர் பெரும் வசதிகள் படைத்தவர் இல்லை. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். மற்றவர்களுக்கு தன்னால்இயன்ற நன்மைகளை செய்பவர். நல்லது செய்ய முடியாவிட்டா லும் பிறருக்கு தீமைகள் புரியாமல் இருப்பது நல்லது; சமூக, வாழ்வில் சீர்குலைவுகளையும் சீர்கேடுகளையும் உண்டாக் காமல் வாழ்வது நல்லது என்ற கருத்து உடையவர். கால ஓட்டத்தில் சகஜமாக நிகழ்ந்து கொண்டிருந்த சம்பவங்கள் அவருக்கு எரிச்சல் தந்தன. நகரத்தில்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/125&oldid=855476" இலிருந்து மீள்விக்கப்பட்டது