பக்கம்:மனிதர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 அவர் தேகத்தைக் குத்தி, எலும்புக் குறுத்துக்குன்ஞம்: புகுந்து சிவிர்ப்பு உண்டாக்கியது அக்கிளுகிளுப்பு. அப்போது தான் அவர் பதறி அடித்து எழுந்தார். அவர் கை தானாகவே கழுத்தைத் தடவியது. அங்கு கடிவாயும் இல்லை, ரத்தமும் இல்லை. எல்லாம் மோகினி வேலைதான். இன்று பெளர்ணமி இல்லையா: பெளர்ணமி அன்று மோகினியின் சக்தி விளை யாடும் என்று சொல்வார்களே' என்று அவர் மனம் நினை வுறுத்தியது. இப்போது நிலவொளி வட்டம் சிறிது மேலேறியிருந்தது. அவட்டத்தினுள் சிலையின் முகமும் மார்புப் பகுதியும் தான் பளிச்செனத் துலங்கின. விம்மிநின்ற மார்பகமும் சிரிக்கும் உதடுகளும், பார்வை யால் கொல்லும் கண்களும் அவரைக் கொத்தின. குழப்பின. இந்த முகம்தான். இதே உதடுகள்தான்... சரியான ஆட்கொல்லி இவள். இவள் இங்கே இருக்கக் கூடாது' என்று பதறினார் அவர். மேஜை மீதிருந்து அதை எடுத்து, பார்வையில் படாதவாறு மூலையில் வைத்துவிட்டு, விடிந்: ததும் தூக்கிக்கொண்டு போய் கிணற்றில் விட்டெறிய வேண்டும் என்ற எண்ணம் அவரை உறுத்தியது. கண்மூடித்தனமான ஆத்திரத்தோடு, ஆவேசமாய் அவர் எழுந்தார். விளக்கைப் போட்டுக்கொள்ள வில்லை. வேகமாகப் பாய்ந்தார். போர்வை காலில் சிக்கியது. அதை இழுத்து அகற்றக் கை விரைந்தது. ஆனால் அது நழுவிக் கால்களில் சுற்றியது. அதைப் பிடித்துக் கொண்டு. அவர் குதிப்பது போல் முன் செல்லவும், இடுப்புத் துணி அவிழ்ந்து விரல்களில் சிக்கி அவரை தடுமாற வைத்தது. கீழே கிடந்த பொருள் எதுவோ தடுக்கிவிட்டது. அவர் தள்ளாடி விழுந்தார். மேஜைமீது மண்டை இடித்தது. பலமான அடி. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/46&oldid=855556" இலிருந்து மீள்விக்கப்பட்டது