பக்கம்:மனிதர்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ { கலாம். ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குரல்கள் அவசரமாய் வெடித்தன: ஏய், அங்கே என்ன அது என்ன?’’ "என்னது, எங்கே?' என்று பலர் பதறினர். பார்வை யால் இருட்டைத் துழாவ முயன்றனர். அதோ கருப்பாத் தெரியுதே... திக் கங்குகள் மாதிரி ரெண்டு மினுமினுக்குதே, அது கண்களாகத்தான் இருக் கணும்... புலியோ என்னவோ...' ஆள் ஆளுக்கு ஒவ் வொன்றை சொன்னார்கள். சிலர் தீயைக் கிளறி, பிரகாசமாய் எரியும்படித் துண்டி விட்டார்கள். அது நெருங்கி வந்தது. தீயின் சூடுஉறைக்கும் எல்லைக்கு வந்து நின்றது. எல்லோருக்கும் தெளிவாகப் புலனாயிற்று புலிதான். பெரிதாக எரியும் தி வளையத்தினுள் பத்திரமாக இருந்தபோதிலும், புலியைக் கண்டதுமே மனிதர்களுக்கு உதரல் எடுத்தது. சிலர் அருகில் இருந்தவர்களோடு ஒட்டி நெருங்கி, தங்கள் பயத்தை சமாளிக்க முயன்றார்கள். புலி எரியும் நெருப்பின் அருகே நின்றது. சோம்பல் முசிப்பதுபோல் உடலை நீட்டி நெளித்தது. வேதனைப் படுவது போல் உறுமியது. கொட்டாவி விடுவது மாதிரி வாயை அகலத் திறந்து மூடியது. மீண்டும் திறந்தது. நெருப்பின் பக்கமாக நெருங்கி வாயைப் பிளந்து கொண்டு நின்றது. அதன் கோரமான கூரிய பற்கள் மனிதரின் அச்சத்தை மேலும் அதிகப்படுத்தின. நடமாடும் கலைக் களஞ்சியம் போன்ற அறிவாளி தனது ஞானத்தை வெளிச்சமிடத் துணிந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/93&oldid=855631" இலிருந்து மீள்விக்கப்பட்டது